• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இன்று ஆவணி மாத பிறப்பு... ஆகஸ்ட் 18 ராசிபலன் - யார் யாருக்கு சிறப்பான நாள்?

இன்று ஆவணி மாத பிறப்பு... ஆகஸ்ட் 18 ராசிபலன் - யார் யாருக்கு சிறப்பான நாள்?

Written BySudharsan G
Published: Aug 18, 2026, 06:10 AM IST|Updated: Aug 18, 2026, 06:18 AM IST
joinshare
August 18 Rasipalan: ஆவணி மாதம் முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 18), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

August 18, Today Horoscope: இன்று ஆவணி முதல் நாள், செவ்வாய் (ஆகஸ்ட் 18) பரபாவ வருடம்.

August 18 Rasipalan1/13

பொறுப்புத் துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
August 18 Rasipalan2/13

மேஷம்

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சகோதரர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் ஒத்துழைப்பான சூழல்கள் நிலவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும். பரணி : ஆதரவுகள் கிடைக்கும். கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.
August 18 Rasipalan3/13

ரிஷபம்

நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : அனுசரித்து செல்லவும். ரோகிணி : உடமைகளில் கவனம் மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
August 18 Rasipalan4/13

மிதுனம்

மனதளவில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் காணப்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மிருகசீரிஷம் : தன்னம்பிக்கையும் பிறக்கும். திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
August 18 Rasipalan5/13

கடகம்

வெளியூர் பயணங்களாலும் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். மறதி சார்ந்த சிக்கல்கள் தோன்றி மறையும். ஆராய்ச்சி கல்வியில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகன விரயம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : ஆதாயம் கிடைக்கும். பூசம் : ஆர்வமின்மையான நாள். ஆயில்யம் : திருப்பம் உண்டாகும்.
August 18 Rasipalan6/13

சிம்மம்

குடும்பத்தில் மனம் விட்டு பேசுதல் புரிதலை மேம்படுத்தும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். வாகன பகுதிகளை சரி செய்கிறீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் மகம் : புரிதல் மேம்படும். பூரம் : முதலீடுகள் அதிகரிக்கும். உத்திரம் : முக்கியத்துவம் அதிகரிக்கும்.
August 18 Horoscope7/13

கன்னி

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் தொடர்பும் ஏற்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பேச்சு வன்மை மூலம் லாபங்களை அடைவீர்கள். பொன் பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம் உத்திரம் : வரவுகள் உண்டாகும். அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும். சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
August 18 Rasipalan8/13

துலாம்

உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் வியாபார பணிகளில் மேன்மைகளை உருவாக்குவீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும். சுவாதி : சோர்வுகள் நீங்கும். விசாகம் : மேன்மையான நாள்.
August 18 Rasipalan9/13

விருச்சிகம்

கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் விசாகம் : வேறுபாடுகள் குறையும். அனுஷம் : அனுபவம் வெளிப்படும். கேட்டை : விமர்சனங்கள் நீங்கும்.
August 18 Rasipalan10/13

தனுசு

புதிய நட்புகள் மலரும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கூட்டாளிகள் வழியில் அனுசரித்து செல்லவும். நெருக்கடியாக இருந்த சில பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : விட்டுக் கொடுத்து செல்லவும். பூராடம் : அனுசரித்து செல்லவும். உத்திராடம் : காலதாமதம் ஏற்படும்.
August 18 Rasipalan11/13

மகரம்

மகிழ்ச்சியான சிந்தனைகள் மூலம் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய பயணங்கள் கைகூடும். இணைய வர்த்தக தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவர் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தயக்க உணர்வு இல்லாமல் செயல்படுவது நல்லது. சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் உத்திராடம் : சுறுசுறுப்பான நாள். திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும். அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
August 18 Rasipalan12/13

கும்பம்

விலகி சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். புதுவிதமான வாய்ப்புகள் உருவாகும். கலை துறைகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் கிடைக்கும். நீண்ட தூர பயண சிந்தனைகள் உண்டாகும். முதலீடுகள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அவிட்டம் : உதவிகள் சாதகமாகும். சதயம் : துரிதம் உண்டாகும். பூரட்டாதி : லாபகரமான நாள்.
August 18 Rasipalan13/13

மீனம்

வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் காணப்படும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் பூரட்டாதி : பொறுமை வேண்டும். உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும். ரேவதி : நெருக்கடியான நாள்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.