இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும், அதை தொடந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளன. இறுதியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தை முன்னிட்டு ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மூத்த வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கபடலாம் என்றும், ஒருநாள் தொடருக்கு இரண்டு வெவ்வேறு அணிகளை அறிவிக்க தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருநாள் தொடரின் கடைசி போட்டி நவம்பர் 15 ஆம் தேதி முடிவடைய உள்ளதாகவும், முதல் டெஸ்ட் நவம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரு தொடர்களுக்கும் இடையில் குறுகிய கால இடைவெளி மட்டுமே இருப்பதால், டெஸ்ட் அணியில் இடம்பெறும் சுப்மன் கில், கே.எல். ராகுல் உள்ளிட்ட வீரர்கள் கடைசி ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி டெஸ்ட் பயிற்சியில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு அணியையும், கடைசி இரண்டு போட்டிகளுக்கு மாற்றங்களுடன் கூடிய மற்றொரு அணியையும் அறிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதல் மூன்று போட்டிகளுக்கான உத்தேச அணி பட்டியல் தற்போது கவனம் பெற்றுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருடன் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
விக்கெட் கீப்பர் பிரிவில் கே.எல்.ராகுல் முதன்மை தேர்வாக இருப்பார். அவருக்கு மாற்று வீரராக ரிஷப் பந்த் அல்லது துரூவ் ஜுரேல் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
ஆல்ரவுண்டர்கள் பிரிவ்வில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இடம்பெறலாம் என தெரிகிறது. இதில் வாஷிங்டன் சுந்தரின் உடல்தகுதி முக்கியமானதாக இருக்கும். அவர் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை என்றால், அவருக்கு பதிலாக நமன் திர் அணியில் சேர்க்கப்படலாம். இறுதி முடிவு வீரர்களின் உடல்தகுதி மற்றும் அணியின் தேவைகளை பொறுட்த்தே அமையும்.
பந்து வீச்சு பிரிவில் அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறலாம் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. இவர்களுடன் குல்தீஒ யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அனுபவமும் இளமையும் கலந்த பந்துவீச்சு படையை உருவாக்க தேர்வுக்குழு விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய ஒருநாள் தொடர்களில் இந்திய அணியின் பந்துவீச்சு செயல்பாடு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக எதிரணிகள் அதிக ரன்களை குவிக்கும் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தை கையாள்வது முக்கியமானதாகி உள்ளது.
இந்த சூழலில், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவது குறித்து தேர்வுக்குழு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதவியில் இல்லாத நிலையில், இடைக்கால தலைவராக பிரக்யான் ஓஜா செயல்படுவதாகவும், அணித் தேர்வில் அவருடைய பங்கு முக்கியமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மூத்த வீரர்கள் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவதற்கான காரணங்கள் குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் வரை, இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகளாகக் கருத முடியாது.
டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளைக் கருத்தில் கொண்டு, கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், சுப்மன் கில்லுக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுலுக்குப் பதிலாக திலக் வர்மா, ரிஷப் பந்துக்குப் பதிலாக துருவ் ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆனால், இவர்கள் அணியில் இடம்பெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இறுதிப் பட்டியலுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
சுப்மன் கில் (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் அல்லது துரூவ் ஜுரேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.