• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஆவணி 2 ராசிபலன் : இன்று இந்த 3 ராசிகளுக்கு புதிய புதிய வாய்ப்புகள் பிறக்கும்

ஆவணி 2 ராசிபலன் : இன்று இந்த 3 ராசிகளுக்கு புதிய புதிய வாய்ப்புகள் பிறக்கும்

Written BySudharsan G
Published: Aug 19, 2026, 06:23 AM IST|Updated: Aug 19, 2026, 06:33 AM IST
joinshare
August 19 Rasipalan: ஆவணி மாதம் முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 19), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

August 19, Today Horoscope: இன்று ஆவணி 2ஆம் நாள், புதன்கிழமை (ஆகஸ்ட் 19) பரபாவ வருடம்.

August 19 Rasipalan1/13

பொறுப்புத் துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
August 19 Rasipalan2/13

மேஷம்

கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும். பரணி : தெளிவு பிறக்கும். கிருத்திகை : மதிப்புகள் மேம்படும்.
August 19 Rasipalan3/13

ரிஷபம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் கிருத்திகை : திறமைகள் வெளிப்படும். ரோகிணி : புரிதல்கள் உண்டாகும். மிருகசீரிஷம் : திருப்பங்கள் உண்டாகும்.
August 19 Rasipalan4/13

மிதுனம்

மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உயர் கல்வி விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும். திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும். புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
August 19 Rasipalan5/13

கடகம்

அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுற்றுலா துறைகளில் புதிய மாற்றம் ஏற்படும். அனுபவம் மிக்கவர்களின் அறிமுகம் உண்டாகும். சுதந்திர மனப்பான்மையும் அதிகரிக்கும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம் நிறம் புனர்பூசம் : அனுசரித்து செல்லவும். பூசம் : அறிமுகங்கள் உண்டாகும். ஆயில்யம் : ஆதரவான நாள்.
August 19 Rasipalan6/13

சிம்மம்

பொருளாதார உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். சிறு தூரப் பயணங்களால் சஞ்சலங்களும் குழப்பங்களும் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் மகம் : வெற்றிகரமான நாள். பூரம் : அனுசரித்து செல்லவும். உத்திரம் : குழப்பமான நாள்.
August 19 Rasipalan7/13

கன்னி

நண்பர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். சகோதரர்கள் வழியில் அலைச்சல் அதிகரிக்கும். அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழைய சிக்கல்களில் சில குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திரம் : பொறுமை வேண்டும். அஸ்தம் : மதிப்பளித்து செயல்படவும். சித்திரை : தடைகள் விலகும்.
August 19 Rasipalan8/13

துலாம்

செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமையைக் கையாளவும். மறைமுகமான நெருக்கடியால் மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் சித்திரை : பொறுமை வேண்டும். சுவாதி : அனுசரித்து செல்லவும். விசாகம் : ஏற்ற இறக்கமான நாள்.
August 19 Rasipalan9/13

விருச்சிகம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். தெய்வ வழிபாடு மன அமைதியைத் தரும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் விசாகம் : அனுசரித்து செல்லவும். அனுஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். கேட்டை : விரயங்கள் உண்டாகும்.
August 19 Rasipalan10/13

தனுசு

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். செயல்பாடுகளில் இருந்து வந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வித்தியாசமான ஆடைகள் மீது ஆர்வம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூராடம் : தாமதங்கள் விலகும். உத்திராடம் : ஆர்வம் பிறக்கும்.
August 19 Rasipalan11/13

மகரம்

மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சமூக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். துறை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். அரசு பணிகளில் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள். திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும். அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
August 19 Rasipalan12/13

கும்பம்

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தடைபட்ட பணிகள் முடியும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். கணவன்-மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அவிட்டம் : கவனத்துடன் செயல்படவும். சதயம் : நிதானம் வேண்டும். பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
August 19 Rasipalan13/13

மீனம்

உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் பூரட்டாதி : பொறுமை வேண்டும். உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும். ரேவதி : வாய்ப்புகள் ஏற்படும்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.