• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புதிய 5 போஸ்டர்கள் வெளியீடு! இதில் இருக்கும் க்ளூவை கவனிச்சீங்களா?

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புதிய 5 போஸ்டர்கள் வெளியீடு! இதில் இருக்கும் க்ளூவை கவனிச்சீங்களா?

Written ByYuvashree M
Published: Nov 03, 2026, 05:58 PM IST|Updated: Nov 03, 2026, 06:07 PM IST
joinshare
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு படமாக இருக்கிறது, அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே. இந்த படத்திலிருந்து புதிதாக 5 போஸ்டர்களை மார்வல் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருக்கிறது.

4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Avengers Doomsday1/5

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே

கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் வெளியீட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Marvel Cinematic Universe2/5

மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்

குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோற்றம் இந்தப் போஸ்டர்கள் மூலம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணி, மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதைக்களம் எனப் பல சிறப்பம்சங்களுடன் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் உருவாகியுள்ளது.
Tremendous Scenes3/5

பிரமிக்க வைக்கும் காட்சிகள்

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படங்களுக்கே உரிய பிரம்மாண்டம், பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் விறுவிறுப்பான கதை சொல்லல் ஆகியவற்றுடன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கத் தயாராகி வருகிறது.
Who are these 34/5

யார் அந்த 3 பேர்

டூம்ஸ்டே திரைப்படத்தின் ஒரு போஸ்டரில் டாக்டர் விக்டர் வான் டூம் உடன் மூன்று பேர் இருக்கின்றனர். இவர்கள், Wanda Maximoff, Doctor Strange, Agatha-வாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இவர்கள் யார் என்பது குறித்த ரகசியம் இன்னும் வெளியில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Avengers Doomsday Release Date5/5

Avengers Doomsday ரிலீஸ் தேதி

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
TAGS:
Hollywood

Trending

  • News
  • Photos
  • Videos
சூர்யகுமார் யாதவையும் கழட்டிவிடும் மும்பை... டிரேட் செய்யும் அணி எது தெரியுமா?

சூர்யகுமார் யாதவையும் கழட்டிவிடும் மும்பை... டிரேட் செய்யும் அணி எது தெரியுமா?

2

Explained | அமெரிக்க இடைத்தேர்தல் 2026 முடிவுகள் எப்போது? யார் கைப்பற்றுவார்கள் காங்கிரஸை?

3

பேய் விரட்ட கூடாது.. 10 வயது மகனை கோயில் பீடத்தில் பலி கொடுத்த தந்தை.. அதிர்ச்சி பின்னணி!

4

திரையரங்குகளில் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி! FDFS ரசிகர்கள் கொண்டாட்டம்..

5

Explained : பசுமை பட்டாசு மட்டும்தான் தீபாவளிக்கு வெடிக்க வேண்டும்! Green Crackers என்றால் என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.