திரைப்படங்களுக்கும் வெப் சீரிஸுக்கும் நடுவுல இருந்த இடைவெளி இப்போ முழுக்கவே மறைஞ்சிடுச்சுன்னு சொல்லலாம். ஒரு காலத்துல சினிமா தியேட்டருக்கு போய் படம் பாக்குறது மட்டும்தான் பெரிய விஷயம், வெப் சீரிஸ் எல்லாம் சாதாரண விஷயம்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா இப்போ நிலைமையே தலைகீழ் ஆய்டுச்சு
பிரமாண்டமான கதைகள், கோடிக்கணக்கிலான பட்ஜெட், முன்னணி ஹாலிவுட் நடிகர்கள்னு எல்லாரும் இப்போ வெப் சீரிஸ் பக்கம் வர தொடங்கியிருக்காங்க. நாம திரையில கதைகளை ரசிக்கும் முறையையே முற்றிலும் மாற்றி அமைத்த, உலக சினிமாவையே அதிரவைத்த 5 முக்கியமான வெப் சீரிஸ் இங்கே!
1/5
தி சொப்ரானோஸ் (The Sopranos)
1999 ஆம் ஆண்டு வெளியான சீரிஸ் தி சொப்ரானோஸ். இந்த சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது. கதாநாயகன் தவறான வழியில் பயணிக்கும் ஒரு குற்றவாளியாக இருந்தாலும், அவரைப் பார்வையாளர்கள் ரசிக்கும்படியான நுட்பமான திரைக்கதை உத்தியை அறிமுகப்படுத்தியது. மேலும், சின்னத்திரையை ஒரு சாதாரண ஊடகமாகப் பார்த்த நிலையை மாற்றி, பெரிய திரை இயக்குநர்களும் நடிகர்களும் தொடர்களில் நடிக்க முன்வரக் காரணமாக இருந்தது.
2/5
கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game Of Thrones)
கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸ் 2011 ஆண்டு வெளியானது. இந்த வெப் சீரிஸின் அடுத்தடுத்த சீசன்கள் 2019 ஆம் ஆண்டு வரை வெளியானது. இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது. உலகின் கோடிக்கணக்கான மக்களை தன் திரைக்கதையால் கட்டிப்போட்டு, வெப் சீரிஸ்களுக்கான தரத்தை உயர்த்தியது. ஒவ்வொரு எபிசோடிற்கும் பல மில்லியன் டாலர்கள் செலவிட்டு, தியேட்டர் படங்களை விடவும் மிரட்டலான கிராபிக்ஸ் (VFX) மற்றும் போர்க்காட்சிகளையும் அமைத்தது.
3/5
ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் (House Of Cards)
ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் வெப் சீரிஸ் 2013 ஆம் ஆண்டு வெளியானது. இதன் அடுத்தடுத்த சீசன்கள் 2018 வரை வெளியானது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இருக்கும் இந்த சீரிஸ் பெரிய பட்ஜெட்டில், ஹாலிவுட் நட்சத்திரங்களை வைத்து சினிமா தரத்திலான தொடர்களை உருவாக்க முடியும் என்பதற்கு அடிதளமிட்டது. மேலும், ஒரு சீசனின் அனைத்து எபிசோட்களையும் ஒரே நாளில் வெளியிடும் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
4/5
டார்க் (Dark)
டார்க் வெப் சீரிஸ் 2017 ஆம் ஆண்டி வெளியானது. ஜெர்மனியின் முதல் நெட்ஃபிலிக்ஸ் தொடரான Time Travel பற்றிய மிகச் சிக்கலான திரைக்கதையை கொண்டது. வழக்கமாக ஒரு சில சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் இத்தகைய கனமான கதை களத்தை கூட, உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் ரசிக்கும் அளவுக்கு மாற்றியது இதன் வெற்றி.
5/5
பிரேக்கிங் பேட் (Breaking Bad)
பிரேக்கிங் பேட் வெப் சீரிஸ் 2008 ஆம் ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியானது. இன்றும் பலரது ஃபேவரைட் சீரிஸாக இருந்து வருகிறது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மனிதன் தனது சூழ்நிலைகளால் எப்படி மாறுகிறார் என்பதை மிகவும் தத்ரூபமாக காட்டி இருப்பதே இந்த வெப் சீரிஸின் மிகப்பெரிய வெற்றி எனலாம்.