• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இந்திய அணியில் கம்பேக்.. புவனேஷ்வர் குமார் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு

இந்திய அணியில் கம்பேக்.. புவனேஷ்வர் குமார் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு

Written ByR Balaji
Published: Oct 17, 2026, 05:25 PM IST|Updated: Oct 17, 2026, 05:28 PM IST
joinshare

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் புவனேஷ்வர் குமார் இடம்பிடித்துள்ளதால், ஹாங் காங் சிக்ஸஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் அத்தொடருக்கு க்ருணால் பாண்டியா கேப்டனாகவும், குல்வந்த் கெஜ்ரோலியா மாற்று வீரராகவும் அறிவித்துள்ளனர்.
 

Cricket1/5

நியூசிலாந்து தொடரில் புவனேஷ்வர் குமார்

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பிடித்துள்ளார். இதனால் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஹாங் காங் சிக்ஸஸ் தொடரில் இருந்து அவர் விலகி உள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, தற்போது க்ருணால் பாண்டியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
Cricket 2/5

ஹாங் காங் சிக்ஸஸ் அணியில் மாற்றம்

புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக குல்வந்த் கெஜ்ரோலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கான மொத்தம் 7 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த ராகுல் தேவத்தியா, குல்வந்த் கெஜ்ரோலியா, பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷசாங் சிங், டெல்லி கேபிடல்ஸ் அணியி நிதிஷ் ராணா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டி.நடராஜன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ராகுல் திரிபாதி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
Cricket3/5

புவனேஷ்வர் குமாருக்கு வாழ்த்து

புவனேஷ்வர் குமார் ஹாங் காங் சிக்ஸஸ் தொடரில் விளையாடாதது வருத்தமளித்தாலும், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அத்தொடரின் மார்க்கெட்டிங் இயக்குநர் அனுராக் பாட்நகர் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவுள்ள புவனேஷ்வர் குமாருக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடர் அவருக்கு சிறப்பாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Cricket4/5

வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலும் வாய்ப்பு?

அர்ஷ்தீப் சிங் தோள்பட்டை காயம் காரணமாக விலகியதால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமாரை சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடிய அவர், 7.80 எகானமியில் 11 விக்கெட்களை வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவரை அணியில் சேர்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Cricket5/5

புவனேஷ்வர் குமாரின் சாதனை

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 22 ஆம் தேதி நடைஎப்ற உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 24, 27, 30 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார் இதுவரை 86 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியதாகும்.
TAGS:
Indian Cricket Team

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.