Arakkonam Ac Emu Train: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஏசி மின்சார ரயில் சேவை இன்று முதல் துவங்கியது. எனவே, இதற்கான டிக்கெட் கட்டணம், ரயில் சேவை குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Arakkonam Ac Emu Train: அரக்கோணம் ஏசி மின்சார ரயில் சேவை இன்று (அக்டோபர் 23) துவங்கிய நிலையில், பயணிகள் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
1/5
சென்ட்ரல் - அரக்கோணம் ஏசி மின்சார ரயில்
சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. சென்னையில் சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு - தாம்பரம் வழித்தடத்தில் மட்டும் ஏசி மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெற்கு ரயில்வே அரக்கோணம் - சென்ட்ரல் இடையே ஏசி மின்சா ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் எல்லாம் முடிந்த பிறகு, இன்று (அக்டோபர் 23) சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஏசி மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
2/5
அரக்கோணம் ஏசி மின்சார ரயில் சேவை துவங்கியது
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே அக்டோபர் 23ஆம் தேதியான இன்று முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை சோதனை சேவையாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வ அறிவித்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஏசி மின்சார ரயில் இயக்கப்படும்.வார இறுதி நாட்களில் ஏசி மின்சார ரயில் சேவை இயக்கப்படாது.
3/5
எந்தெந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்கும்?
இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, குறைந்த நிறுத்தங்களுடன் அரக்கோணம் சென்றடைகிறது. இந்த ரயில் பெசின் பிரிட்ஜ், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் ரயில் காலை 6:30 மணிக்கு ஆவடியிலிருந்து புறப்பட்டு, காலை 7:45 மணிக்கு அரக்கோணத்தை வந்தடையும். மேலும், காலை 8 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு, சென்ட்ரலுக்கு 9.30 மணிக்கு வந்தடையும்.
4/5
காலை 6.30 மணி முதல் இரவு 9.10 மணி வரை ரயில் சேவை
மேலும், சென்ட்ரலில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, ஆவடிக்கு காலை 10.25 மணிக்கு சென்றடைகிறது. ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு மாலை 5.25 மணிக்கு புறப்பட், சென்ட்ரலுக்கு 6.10 மணிக்கு சென்றடைகிறது. சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்திற்கு இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் செல்கிறது. அரக்கோணத்தில் இருந்து 8.10 மணிக்கு புறப்பட்டு, 9.10 மணிக்கு ஆவடி சென்றடைகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
5/5
அரக்கோணம் ஏசி ரயிலில் கட்டணம் விவரம்
அரக்கோணம் ஏசி ரயிலில் கட்டணத்தை பொறுத்தவரை குறைந்தபட்பம் ரூ.35 ஆகவும், அதிகபட்சம் ரூ.120 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 - 10 கி.மீ ரூ.35, 11 -15 கி.மீட்டருக்கு ரூ.40, 16 -25 கி.மீட்டருக்கு ரூ.60, 26 -35 கி.மீட்டருக்கு ரூ.85, 51 - 55 கி.மீட்டருக்கு ரூ.100, 56- 60 கி.மீட்டருக்கு ரூ.105 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.