• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /இஷான் கிஷன் விலகல்... பிளேயிங் 11-ல் சூர்யவன்ஷியை சேர்க்கக் கூடாது - காரணம் இதுதான்!

இஷான் கிஷன் விலகல்... பிளேயிங் 11-ல் சூர்யவன்ஷியை சேர்க்கக் கூடாது - காரணம் இதுதான்!

IND vs NZ T20I: இஷான் கிஷன் காயம் காரணமாக 2வது போட்டியில் இருந்து விலகியிருக்கும் நிலையில், இந்திய அணியில் அவருக்கு பதில் வைபவ் சூர்யவன்ஷி விளையாட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அந்த முடிவு சரியாக இருக்குமா என்பது குறித்து இங்கு அலசலாம்.

Written BySudharsan G
Published: Oct 23, 2026, 12:22 PM IST|Updated: Oct 23, 2026, 12:44 PM IST
joinshare
இஷான் கிஷன் விலகல்... பிளேயிங் 11-ல் சூர்யவன்ஷியை சேர்க்கக் கூடாது - காரணம் இதுதான்!
Image Credit: IND vs NZ T20I: Ishan Kishan, Vaibhav Sooryavanshi | Image Source : X/@BCCI

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இஷான் கிஷன் விலகல்... பிளேயிங் 11-ல் சூர்யவன்ஷியை சேர்க்கக் கூடாது - காரணம் இதுதான்!

இஷான் கிஷன் விலகல்... பிளேயிங் 11-ல் சூர்யவன்ஷியை சேர்க்கக் கூடாது - காரணம் இதுதான்!

2

தேசபக்தி குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை: அண்ணாமலை

3

தூத்துக்குடி: தாய் கொலை.. 2 சிறுமிகள் கடத்தப்பட்டது ஏன்? நள்ளிரவு 1 மணிக்கு நடந்தது என்ன?

4

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: மொபைல் போன் மூலம் நொடிகளில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி?

5

இனி திமுகவால் ஜெயிக்கவே முடியாது... அடித்துச் சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IND vs NZ T20I: நியூசிலாந்து நாட்டுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதலில் டி20ஐ தொடர் நடைபெறும் நிலையில், இத்தொடரின் முதல் போட்டி நேற்று (அக். 22) நடைபெற்றது.

முதல் போட்டியில் 226 ரன்கள் என்ற பெரிய இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை வகித்துள்ளது. இதுதான் இந்திய அணி டி20ஐ-ல் மேற்கொண்ட அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங் ஆகும்.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய அணியில் தவிர்க்க முடியாத தூண்...? Explained

இந்தியாவை காப்பாற்றிய பேட்டர்கள்

முதல் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சொதப்பினாலும் பேட்டர்கள் காப்பாற்றிவிட்டனர் எனலாம். சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் 67 ரன்களை குவித்து நம்பிக்கை அளிக்க, மிடில் ஓவர்களில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களை அடித்து சிறப்பாக செயல்பட்டார்.

இறுதிக்கட்ட அழுத்தத்தை சிறப்பாக கையாண்டு 15 பந்துகளில் 42 ரன்களை குவித்து பினிஷராக செயல்பட்டு கவனம் ஈர்த்தார். ஆட்டநாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை 2-2 என்ற நிலையில் சமன் செய்த இந்திய அணி வெறும் 4 நாட்கள் இடைவெளியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

டி20ஐ தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு

இதனால் வீரர்களுக்கு ஜெட் லாக் அதிகமாக இருக்கும் என்றும் சூழலை நன்கு அறிந்த நியூசிலாந்துக்கே இந்த டி20ஐ தொடரில் அதிக சாதகம் என்றும் பலராலும் கணிக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தையும் இந்தியா தவிடுபொடியாக்கி உள்ளதால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

முதல் போட்டியில் நடந்த அதே கிறிஸ்ட்சர்ச் ஹாக்லி ஓவல் மைதானத்தில் நாளை (அக். 24) இரண்டாவது டி20ஐ போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு வீசப்பட்டு, போட்டி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும். Sony Liv தளத்திலும், Sony Sports Network சேனல்களிலும் நேரலையில் காணலாம்.

மேலும் படிக்க | MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

இஷான் கிஷனுக்கு காயம்

இந்நிலையில், நாளைய இரண்டாவது டி20ஐ போட்டியில் இருந்து அதிரடி இடதுகை பேட்டர் இஷான் கிஷன் காயம் காரணமாக விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டிருக்கும் X பதிவில், "நியூசிலாந்து தொடரின் முதல் டி20ஐ போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட வலது தொடை உள் தசையில், லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது" என குறிப்பிட்டுள்ளது.

𝗨𝗽𝗱𝗮𝘁𝗲: Ishan Kishan is ruled out of the second T20I against New Zealand due to a low grade right adductor strain, which he sustained during the first T20I of the series. The BCCI Medical Team is monitoring his progress. #TeamIndia | #NZvIND https://t.co/QbZpuVh1hQ

— BCCI (@BCCI) October 23, 2026

வைபவ் சூர்யவன்ஷிக்கு அதிக வாய்ப்பு

ஆனால், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில், வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அதில் அவர், "இஷான் கிஷனுக்கு இடுப்புப் பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் திலக் வர்மா நம்பர் 3இல் விளையாடினார்.

2வது போட்டியில் இஷான் கிஷன் விளையாடுவதற்கும் வாய்ப்பில்லை. ஒருவேளை இஷான் கிஷன் விளையாடவில்லை என்றால், மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி அவர் முழுமையாக குணமடையும் வரை, அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி நிச்சயமாக களமிறங்கலாம். அவர் வலுவான போட்டியாளர்களில் ஒருவர்" என்றார்.

வைபவ் சூர்யவன்ஷி வேண்டாம் - ஏன்?

வைபவ் சூர்யவன்ஷி அணிக்குள் வரும்பட்சத்தில் அவர் ஓபனிங்கில் விளையாட வைக்க வேண்டும். எனவே, ஆசிய விளையாட்டுத் தொடரில் பேட்டிங் செய்ததை போல் சஞ்சு சாம்சனை நம்பர் 3இல் விளையாட வைக்கலாம் என இந்திய அணி நிர்வாகம் கருதலாம். ஆனால், சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக தனது முத்திரையை ஒபனிங்கில் பதித்து வருகிறார். 

அடுத்து இஷான் கிஷன் அணிக்கு வரும்போது மீண்டும் சாம்சன் ஓபனிங்கிற்கு போக வேண்டும். எனவே, இந்த ஒரு போட்டிக்காக வைபவ் சூர்யவன்ஷியை அணிக்குள் கொண்டுவருவது சரியாக இருக்காது.

சிவம் தூபேவுக்கு வாய்ப்பு

கடந்த முதல் டி20ஐ போட்டியில் இஷான் கிஷன் நம்பர் 5 வீரராக களமிறங்கினார். நம்பர் 3இல் திலக் வர்மாதான் பேட்டிங் செய்தார். அதாவது, அபிஷேக் சர்மா ஆட்டமிழக்கும் போது இடது கை பேட்டர் வருவதும், சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தால் வலது கை பேட்டர் வருவதும் வழக்கமாக இருந்தது.

இஷான் கிஷன் 5 வீரராக விளையாடியது போல், அவருக்கு பதில் நம்பர் 5இல் விளையாட சிவம் தூபேவுக்கு நாளைய பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கலாம். அவர் வேகப்பந்துவீச்சு ஆப்ஷனையும் கொடுப்பார்.

இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டதால், நாளைய போட்டியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது. அந்த வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் விவரம் இதோ:

சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சிவம் தூபே, நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார்.

மேலும் படிக்க | சிஎஸ்கே குறிவைக்கும் இளம் வீரர்.. போட்டிபோடும் SRH, KKR! முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team