• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /பயணிகளுக்கு குட் நியூஸ்! மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்

பயணிகளுக்கு குட் நியூஸ்! மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்

Written ByUmabarkavi K
Published: Nov 06, 2026, 09:31 AM IST|Updated: Nov 06, 2026, 09:40 AM IST
joinshare
Chennai Metro Train Service: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் கூட்ட நெரிசலின்றி, எளிதாக செல்லலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chennai Metro Train Service: இன்று (நவம்பர் 6) பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 

Chennai Metro Rail Service Extends1/5

தீபாவளியையொட்டி, சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கிய சென்னை மக்கள்

சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளின் சீரான பயணத்திற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் வெளியூர் செல்வதால், மெட்ரோ ரயிலில் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Chennai Metro Rail Service Extends2/5

பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

இதனால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் வெளியூர் செல்ல புறப்பட்டனர். இதனால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் இப்போதே அலைமோதுகிறது. இந்த நிலையில், பயணிகள் எளிதாக செல்லும் வகையில், மெட்ரோ ரயில் சேவை நேரத்தை மெட்ரோ நிர்வாகம் நீட்டித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு (08.11.2026), சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 05.11.2026 மற்றும் 06.11.2026 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை இயக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail Service Extends3/5

மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு (08.11.2026), சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நேற்று முதல் 06.11.2026 வரை கூடுதல் சேவைகளை இயக்கவுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
Chennai Metro Rail Service Extends4/5

பீக் ஹவரில் மாலை 5 மணிக்கு பதிலாக 4 மணிக்கே ரயில் சேவை

நவம்பர் 6, 2026 (வெள்ளிக்கிழமை - இன்று): பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak-hour) மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கமான மாலை 5:00 மணிக்கு பதிலாக, மாலை 4:00 மணிக்கே தொடங்கி, இரவு 8:00 மணிக்கு பதிலாக இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும்.
Chennai Metro Rail Service Extends5/5

இன்று ஒருநாள் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

முனைய நிலையங்களிலிருந்து (Terminal Stations) புறப்படும் கடைசி மெட்ரோ இரயில் நேரம் பச்சை மற்றும் நீல வழித்தடத்தில்: வழக்கமான இரவு 11:00 மணிக்கு பதிலாக, நள்ளிரவு 12:00 மணி வரை இயங்கும். மஞ்சள் வழித்தடத்தில்: வழக்கமான இரவு 9:00 மணிக்கு பதிலாக, இரவு 11:00 மணி வரை இயங்கும். மேற்கண்ட மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை இன்று (நவம்பர் 6) மட்டுமே பொருந்தும். பயணிகள் இதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு, சென்னை மெட்ரோவுடன் பாதுகாப்பான, வசதியான மற்றும் தடையற்ற பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
25 நாட்களை கடந்தது.. செஞ்சி சிறுமி எங்கே? சிக்கும் வில்லுப்பாட்டு குழு?  சிபிசிஐடி விசாரணை

25 நாட்களை கடந்தது.. செஞ்சி சிறுமி எங்கே? சிக்கும் வில்லுப்பாட்டு குழு? சிபிசிஐடி விசாரணை

2

Explainer: டெல்லி நகரை வாட்டும் காற்று மாசுபாடு, திணறும் மக்கள்: 470-ஐத் தாண்டும் AQI

3

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. விடாமல் கொட்டப்போகுது மழை.. தீபாவளிக்கு எப்படி?

4

இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்: முழு விவரம்

5

‘சீன்’ ட்விட்டர் ரிவ்யூ! 3வது ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தாரா சூர்யா? ரசிகர்களின் விமர்சனம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.