CSK Head Coach : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை செயலாளராக இந்தியர் ஒருவரை முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக 2023ஆம் ஆண்டில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அதன்பின் மூன்று ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை. இந்தச் சூழலில், ஸ்டீபன் பிளமிங் அவரது தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் யார் என்பதே தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் கேள்வியாக உள்ளது.
1/5
புதிய தலைமை பயிற்சியாளர் யார்...?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் பதவி விலகிய நிலையில், புதிய பயிற்சியாளருக்கான தேடல் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது. சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதில் சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
2/5
முழு பொறுப்பையும் தோனியிடம் ஒப்படைத்த சிஎஸ்கே
கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாத நிலையில் கடும் விமர்சனங்கள் அணி நிர்வாகத்தின் மீது இருந்தன. இந்தச் சூழலில் சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பை முழுமையாக தோனியிடம் ஒப்படைத்துவிட்டதாக சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்ததாக The Indian Express ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
3/5
சுரேஷ் ரெய்னா, இயான் மார்கன் இல்லையா...?
சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளராக, சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா முயற்சித்ததாக கூறப்பட்டது. அதேநேரத்தில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கனை சிஎஸ்கே பக்கம் அழைத்து வரவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் கசிந்தன. அந்த வகையில், சிஎஸ்கேவின் புதிய பயிற்சியாளர் இந்தியரா அல்லது வெளிநாட்டு வீரரா என்பதே இன்னும் இறுதியாகவில்லை என கூறப்படுகிறது.
4/5
சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஹேமங் பதோனி
சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி ஒரு இந்தியரை சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளராக்க நினைப்பதாகவும், அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஹேமங் பதானியின் பெயரே முதலில் அடிபடுகிறது. அவர் பல டி20 தொடர்களில் சிறப்பாக செயலாற்றியதின் பலனாக அவரை சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டுவர தோனி திட்டமிடுவதாக The Indian Express செய்தி வெளியிட்டுள்ளது.
5/5
சிஎஸ்கேவின் வெளிநாட்டு ஆப்ஷன் யார்...?
இருப்பினும் இன்னும் அது உறுதியாகவில்லை. தோனி தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்தாலும் கூட சிஎஸ்கே நிர்வாகத்திடமே இறுதி முடிவு இருக்கிறது. அவர்களும் சில வெளிநாட்டு ஆப்ஷன்களை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை வெளிநாட்டு ஆப்ஷன் என்றால் அதில் இயான் மோர்கன் முன்னணியில் இருப்பார் என தெரிகிறது.