• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ரேஸ் பார்க்க வந்த திரிஷா... பச்சைக்கொடி காட்டிய CM விஜய்... சீறிப்பாய்ந்த அஜித் கார்

ரேஸ் பார்க்க வந்த திரிஷா... பச்சைக்கொடி காட்டிய CM விஜய்... சீறிப்பாய்ந்த அஜித் கார்

Written BySudharsan G
Published: Sep 12, 2026, 10:41 PM IST|Updated: Sep 12, 2026, 10:46 PM IST
joinshare
நடிகரும் ரேஸருமான அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயைத்தை கொடியசைத்து முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். பந்தயம் நடைபெறும் லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டுக்கு நடிகை திரிஷாவும் வருகை தந்துள்ளார், அவரது வீடியோவும் வைரலாகி வருகிறது.

லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் அஜித்குமாரின் Ajith Redant Racing அணி பங்கேற்றுள்ளது. இதில் அஜித் குமார் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த ஆதித்யா பட்டேல் பங்கேற்கின்றனர். இந்த பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்.
 

 

CM Vijay Silverstone1/5

அஜித் பங்கேற்ற லண்டன் கார் ரேஸ்

லண்டனில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் இந்தியாவின் சார்பாக நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமார் பங்கேற்றுள்ளார். அஜித்குமாரின் Ajith Redant Racing அணி சார்பில் அஜித்குமார் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகிய இரண்டு ரேஸர்கள் பங்கேற்றனர். (Screen Grab: Website/FIA WEC)
CM Vijay Silverstone2/5

காரை ரேஸை தொடங்கிவைத்த CM விஜய்

இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய இந்த கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடியை அசைத்து தொடங்கிவைத்தார். மொத்தம் 44 கார்கள் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் சீறிப்பாய்ந்தன. முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் உடன் இருந்தார். (Screen Grab: Website/FIA WEC)
CM Vijay Silverstone3/5

அஜித் குமார் மற்றும் அவரது காருடன் விஜய் எடுத்த புகைப்படம்

கார் பந்தயம் தொடங்குவதற்கு முன்னர் அஜித்குமாரின் காரின் மீது முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதற்கு முன், அஜித்குமார் குழுவினருடன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டையும் முதலமைச்சர் விஜய் சுற்றிப்பார்த்தார். (Screen Grab: Website/FIA WEC)
CM Vijay Silverstone4/5

CM விஜய் - ரேஸர் அஜித் சந்திப்பு புகைப்படங்கள்

முன்னதாக, சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டுக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தபோது அவரை அஜித்குமார் கட்டியணைத்து வரவேற்றார். அஜித்தை பார்த்ததும் விஜய் ஓடிப்போய் கட்டிப்பிடித்த காட்சிகளும் நெகிழ்ச்சியாக இருந்தது. புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. (Image Source : Instagram/@jagadish_palanisamy)
CM Vijay Trisha Silverstone5/5

லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் நடிகை திரிஷா

இது ஒருபுறம், சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டுக்கு நடிகை திரிஷாவும் வருகை தந்துள்ளார். அவரது வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் விஜய், அஜித் மற்றும் திரிஷா ஆகியோர் திரைத்துறை நண்பர்கள் ஆவர். கடந்த மே மாதம் அஜித் குமாரின் தாயார் மறைவின்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் இணைந்தே இரங்கல் தெரிவிக்க அஜித்தின் வீட்டுக்கு சென்றதும் நினைவுக்கூரத்தக்கது. (Screen Grab: Website/FIA WEC)
TAGS:
Vijay Thalapathy

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.