• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ஜெகன் குடும்பத் திருமணத்தில் முதல்வர் விஜய் & அதானி.. சந்திப்பின் பின்னணி என்ன?

ஜெகன் குடும்பத் திருமணத்தில் முதல்வர் விஜய் & அதானி.. சந்திப்பின் பின்னணி என்ன?

Written ByR Balaji
Published: Nov 06, 2026, 09:02 PM IST|Updated: Nov 06, 2026, 09:05 PM IST
joinshare

ஜெகன் மோகன் ரெட்டி குடும்ப திருமண வரவேற்பில் முதல்வர் விஜய் பங்கேற்றது, அதானி - அம்பானி தொழில் தொடர்புகள் மற்றும் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்த அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Tamil Nadu 1/5

ஜெகன் மோகன் ரெட்டி குடும்ப விழாவில் முதலமைச்சர் விஜய்..

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறவினர் அனில் ரெட்டி மகள் ஸ்ரேயா - உஜ்வல் பெலானி திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார். லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆந்திர அரசியல் மற்றும் தொழில் துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். விஜயின் இந்த வருகை தமிழகத்தை தாண்டி ஆந்திர அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
Tamil Nadu2/5

யார் இந்த அனில் ரெட்டி?

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரெட்டி குளோபல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் ரெட்டி. இந்த நிறுவனம் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. அனில் ரெட்டி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெரியப்பா மகன் ஆவார். யெஸ்.ஆர். குடும்பத்தை சேர்ந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். இதன் காரணமாகவே அவரது மகளின் திருமண வரவேற்பு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குடும்ப நிகழ்வாக நடைபெற்ற இந்த விழாவில் அரசியல் மற்றும் தொழில்துறை சார்ந்த முக்கிய நபர்கள் கலந்து கொண்டது கவனத்தை பெற்றுள்ளது.
Tamil Nadu3/5

அதானி - ஜெகன் மோகன் ரெட்டி தொடர்பு.. அம்பானி - சந்திரபாபு நாயுடு நட்பு?

ஆந்திர அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையே நீண்டகால அரசியல் போட்டி இருந்து வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் அதானி குழுமத்துடன் தொடர்புடைய முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெற்றன. அதேபோல், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் அம்பானி குழுமத்தின் முதலீடுகள் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த பின்னணியில், அதானி மற்றும் அம்பானி ஆகிய தொழிலதிபர்களின் அரசியல் தொடர்புகள் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
Tamil Nadu4/5

விஜய்க்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு.. அரசியல் கணக்கு என்ன?

தவெக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. முதலீடுகள் குறைந்துள்ளதாகவும், சில நிறுவனங்கள் ஆந்திராவை நோக்கி செல்வதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பாராட்டியதும், அவரை ஆந்திராவுக்கு அழைத்ததும் அரசியல் கவனத்தை பெற்றது. இதனால், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் விஜயின் அரசுடன் ஆந்திர அரசு நட்புறவை வளர்க்க முயற்சிக்கிறதா என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அனில் ரெட்டி குடும்ப திருமண நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டது, ஆந்திர அரசியல் வட்டாரத்தில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu 5/5

அதானி - விஜய் சந்திப்பு.. தமிழக முதலீடுகளில் புதிய நகர்வு ஏற்படுமா?

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தொழிலதிபர் கவுதம் அதானி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் விஜயும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால், அரசியல் மற்றும் தொழில் துறை தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதானி குழுமம் ஆர்வம் காட்டுமா? விஜய் தலைமையிலான தவெக அரசுடன் தொழில் தொடர்புகளை மேம்படுத்துமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முன்னதாக, திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களிலும் அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்த நிகழ்வுகள் கவனத்தை பெற்றுள்ளன. ஆனால், இந்த திருமண நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டது முதலீட்டு ஒப்பந்தம் அல்லது அரசியல் ஆதரவு தொடர்பான முடிவு என்று கூறுவதற்கு தற்போது உறுதியான ஆதாரங்கள் இல்லை.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங்? MI - PBKS மெகா டிரேட்.. யாருக்கு லாபம்? Explainer

ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங்? MI - PBKS மெகா டிரேட்.. யாருக்கு லாபம்? Explainer

2

போலீசாரை மிரட்டி கத்தியால் வெட்ட முயற்சி! போதை இளைஞரின் வெறிச்செயல்..

3

”ஒரு வருஷம் பொறுங்க.. விஜய் அண்ணன் ஆட்டம் தெரியும்".. எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி

4

மூக்குத்தி அம்மன் 2 vs சீன் vs ராமாயணா : தீபாவளி வின்னர் யார்? மக்களுக்கு பிடித்த படம் எது?

5

சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகள்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.