உலக புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து விளையாட்டு போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
போர்த்துகலின் உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரராக இருப்பவர், கிரிஸ்டியானோ ரொனால்டோ. 41 வயதாகும் இவர், தற்போது தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
1/5
ஓய்வை அறிவித்தி ரொனால்டோ
41 வயதாகும் ரொனால்டோ, தான் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கடைசியாக தன்னுடைய 234வது ஆட்டத்திற்கு பிறகு, அவர் இம்முடிவினை எடுத்துள்ளார்.
2/5
சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சர்ச்சை
போர்ச்சுகலின் உலக கோப்பை தொடருக்கு பிறகு புதிய பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் வந்திருந்தார். இவருக்கும் ரொனால்டோவிற்கும் கருத்து வேறுபடு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. ரொனால்டோ பங்கேற்காமல், அவருடைய அணி 3 போட்டிகளில் வென்றது.
3/5
ரொனால்டோவுக்கு பதில் களமிறக்கப்பட்ட வீரர்
இவருக்கு பதிலாக, வாய்ப்பு பெற்ற கொன்சாலோ ராமோஸ் எனும் கால்பந்து வீரர் 3 கோல் அடித்திருந்தார். இதனிடையே நார்வேக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவுக்கு வாய்ப்பு தராமல், மைதானத்தின் ஒரு பகுதியில் பயிற்சி செய்யுமாறு ஜீசஸ் தெரிவித்ததால் இவருக்கும் ரொனால்டோவுக்கும் வாக்குவதம் ஏற்பட்டுள்ளது.
4/5
ரொனால்டோ அணியை விட்டு வெளியேறினார்
ஜீசஸ் இப்படி கூறியதை தவறு என ஒப்புக்கொள்ள வேண்டும் ரொனால்டோ கேட்டுள்ளார். ஆனால் பயிற்சியாளர் அதனை கண்டுகொள்ளாததால் போர்ச்சுகல் அணியின் முகாமை விட்டு ரொனால்டோ வெளியேறினார். இதையடுத்து ரொனால்டோ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
5/5
ஓய்வை அறிவித்து வீடியோ வெளியீடு
ரொனால்டோவிற்கு ஒரு பெரிய தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தன் ஓய்வை அறிவித்திருக்கும் ரொனால்டோ, 23 வருடங்களாக தான் 7ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்து, தன் நாட்டிற்காக விளையாடியதாகவும், இப்போது அதை எதிர்காலத்தில் வருபவர்களுக்கு கொடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.