• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /கூட்டுறவு லோன் சிறப்பு முகாம் : சொந்த தொழில் செய்ய சூப்பர் சான்ஸ்!

கூட்டுறவு லோன் சிறப்பு முகாம் : சொந்த தொழில் செய்ய சூப்பர் சான்ஸ்!

Written ByKarthikeyan Sekar
Published: Oct 15, 2026, 07:46 AM IST|Updated: Oct 15, 2026, 07:50 AM IST
joinshare
கூட்டுறவு வங்கிகளில் லோன் வாங்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

கூட்டுறவு வங்கி லோன் முகாம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொழில்களுக்கு லோன் வாங்கலாம்? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Cooperative Bank Loan Special Camp1/5

கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு கடன் முகாம்கள்

கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு கடன் முகாம்கள் : தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடப்பாண்டில் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எட்ட வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப் பெண்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறை கடன்களுக்கான முகாம்களும் நடைபெறுகின்றன.
Cooperative Bank Loan Special Camp2/5

ரூ.50 கோடி மதிப்பில் நீண்ட காலக் கடன்கள்

ரூ.50 கோடி மதிப்பில் நீண்ட காலக் கடன்கள் : தற்போது கூடுதலாக ரூ.50 கோடி மதிப்பிலான நீண்ட காலக் கடன்களை (Long Term Loans) வழங்க கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. வேளாண்மை மற்றும் ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு கடன் உதவி வழங்கப்படவுள்ளது.
Cooperative Bank Loan Special Camp3/5

எந்தெந்த தொழில்களுக்கு கடன் கிடைக்கும்?

எந்தெந்த தொழில்களுக்கு கடன் கிடைக்கும்? : வேளாண் இயந்திரமயமாக்கல், குளிர் பதங்கிடங்குகள் அமைத்தல், அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு கடனுதவி கிடைக்கும். மேலும், கறவை மாடு, ஆடு மற்றும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட கால்நடை பராமரிப்பு தொழில்களுக்கும் இக்கடன் வழங்கப்படுகிறது.
Cooperative Bank Loan Special Camp4/5

ரூ.30 லட்சம் வரை கடன்

ரூ.30 லட்சம் வரை கடன் – தேவையான ஆவணங்கள் : தகுதியுடைய உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை நீண்ட காலக் கடன் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை (PCARDB) அணுகலாம். விண்ணப்பத்துடன் புகைப்படங்கள், ஆதார் உள்ளிட்ட அடையாள/முகவரிச் சான்று, KYC விவரங்கள் மற்றும் நில அடமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
Cooperative Bank Loan Special Camp5/5

வாட்ஸ்அப் எண்

கூடுதல் தகவல்களுக்கு வாட்ஸ்அப் எண் : பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாக பயனடையுமாறு கூட்டுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 9884000845 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
RCB செய்யப்போகும் அதிரடி மாற்றம்.. 7 வீரர்களை விடுவிக்க திட்டம்? அடுத்த கேப்டன் இவர்தான்!

RCB செய்யப்போகும் அதிரடி மாற்றம்.. 7 வீரர்களை விடுவிக்க திட்டம்? அடுத்த கேப்டன் இவர்தான்!

2

நியூசிலாந்தை காலி செய்த திலக் - நிதிஷ் ஜோடி... இந்திய அணி மிரட்டல் வெற்றி

3

இனி EB ரீடிங் எடுக்க ஆள் வரத் தேவையில்லை: தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் Explained

4

Kanyakumari Red Alert: திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை மூடல்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

5

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.