• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தேவா இசைக்கு உலக அரங்கில் கிடைத்த கவுரவம்.. சிங்கப்பூர் அதிபரின் இறுதிச் சடங்கில் ஒலித்த பாடல்!

தேவா இசைக்கு உலக அரங்கில் கிடைத்த கவுரவம்.. சிங்கப்பூர் அதிபரின் இறுதிச் சடங்கில் ஒலித்த பாடல்!

Written ByR Balaji
Published: Oct 17, 2026, 07:25 PM IST|Updated: Oct 17, 2026, 07:28 PM IST
joinshare

இசையமைப்பாளர் தேவா இசையில் உருவான ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடல், சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் அரசு மரியாதையுடனான இறுதிச் சடங்கில் ஒலித்து சர்வதேச கவனத்தைப் பெற்றது.
 

World News1/5

தேவா இசைக்கு உலக அரங்கில் கிடைத்த கவுரவம்

தமிழ் திரையிசையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர் தேவா. ரசிகர்களை ஆட்டம் போட வைத்த கானா பாடல்கள் முதல் மனதை வருடும் மெலடி பாடல்கள் வரை, பல்வேறு இசை வடிவங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அவரது இசையில் உருவான ஒரு தமிழ் திரைப்படப் பாடல்,சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் அரசு மரியாதையுடனான இறுதி சடங்கில் ஒலித்தது பலரையும் ஆச்சரியப்படுத்திய சம்பவமாகும். அந்த பாடல், சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் திரைப்படத்தின் ’தஞ்சாவூர் மண்ணெடுத்து’ என்ற பாடல் ஆகும்.
World News2/5

வைரமுத்துவின் வரிகளுக்கு உயிர் கொடுத்த தேவா

1997 ஆம் ஆண்டு வெளியான பொற்காலம் படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார். வைரமுத்து எழுதிய ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடலை கிருஷ்ணராஜ் பாடியிருந்தார். தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மண்ணும் நீரும் சேகரிக்கப்பட்டு ஒரு அழகிய பொம்மை உருவாக்கப்படுவதை பாடல் எடுத்துரைக்கிறது. தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் இந்த வரிகள், பல்வேறு இடங்களின் அடையாளங்கள் ஒன்றிணைவதை அழகாக சித்தரிக்கின்றன. இதுவே சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
World News3/5

முன்னாள் அதிபரின் மனதைத் தொட்ட பாடல்

எஸ்.ஆர். நாதனுக்கு ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடல் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருந்ததாக பாடலாசிரியர் வைரமுத்து நினைவுகூர்ந்துள்ளார். தமிழகத்தில் தனது முன்னோர்கள் வாழ்ந்த ஊர் எது என்பதை நாதனால் உறுதியாக கண்டறிய முடியவில்லை. பாடலில் இடம்பெறும் பகுதிகளில் ஏதேனும் ஒன்று தனது பூர்வீகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், அந்தப் பாடல் அவருக்கு வெறும் திரைப்படப் பாடலாக இல்லாமல், தன் வேர்களையும் பூர்வீகத்தையும் நினைவூட்டும் ஒன்றாக மாறியது.
World News4/5

அரசு இறுதி சடங்கில் ஒலித்த தமிழ் பாடல்!

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.ஆர். நாதன் மறைந்தபோது, சிங்கப்பூரில் நடைபெற்ற அரசு மரியாதையுடனான இறுதி நிகழ்வின் தொடக்கத்தில் ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடல் ஒலிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற அந்த நிகழ்வில் தமிழ் பாடல் இடம்பெற்றது சர்வதேச அளவில் கவனத்தைபெற்றது. பாடலின் பொருளை அறிய விரும்பிய சீன, மலாய் சமூகத்தினருக்கு அங்கிருந்த தமிழர்கள் அதன் வரிகளின் அர்த்தத்தை விளக்கியதாக வைரமுத்து தெரிவித்திருந்தார். மொழி வேறுபாடுகளை கடந்து ஒரு பாடல் மக்களின் உணர்வுகளைத் தொட முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக அமைந்தது.
World News5/5

தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் தேவாவின் இசை!

தேவாவின் இசைப் பயணத்தில் இந்தப் பாடலுக்கு தனித்துவமான இடம் உண்டு. பாட்ஷா, அண்ணாமலை, ஆசை, காதல் கோட்டை, வாலி, குஷி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மூலம் பல தலைமுறை ரசிகர்களிடம் அவர் புகழ்பெற்றார். குறிப்பாக, கானா இசையை திரையிசையில் பிரபலப்படுத்தியவர்களில் தேவாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. ரசிகர்களை உற்சாகப்படுத்திய பாடல்களுடன், உலக அரங்கில் கவனம் பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ போன்ற பாடல்களும் அவரது இசைப் பயணத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல கலைஞர்களின் பங்களிப்பில் உருவான இந்தப் பாடல், இசைக்கு மொழி எல்லைகள் கிடையாது என்பதை இன்றும் நினைவூட்டுகிறது.
TAGS:
World

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.