Tejashwi Yadav | ஐபிஎல் கிரிக்கெட் பிளேயர் ஒருவர் பீகார் மாநில துணை முதலமைச்சர் ஆன சுவாரஸ்ய தகவலை இங்கே பார்க்கலாம்.
Tejashwi Yadav | ஐபிஎல் கிரிக்கெட் பிளேயராக இருந்த தேஜஸ்வி யாதவ், பீகார் மாநில துணை முதலமைச்சராக ஆனது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
1/7
தேஜஸ்வி யாதவ் அரசியல்
பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி, அம்மாநில அரசியலில் மிக முக்கிய மற்றும் செல்வாக்குமிக்க தலைவராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
2/7
பள்ளிப் படிப்பு
கிரிக்கெட் மீது கொண்ட தீவிர ஆர்வத்தால் 10 ஆம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தினார். அதன் பின்னர் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தி, பின்னாளில் அரசியலுக்கு வந்தார்.
3/7
இளைய மகன்
பீகாரின் முன்னாள் முதலமைச்சர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி இணையரின் இளைய மகன் இவர். தந்தை சிறைச்சென்ற போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை வழிநடத்தி முக்கிய தலைவராக உருவெடுத்தார்.
4/7
Tejashwi Yadav IPL
2015ல் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராகோபூர் தொகுதியில் வென்ற இவர், தனது 26வது வயதிலேயே பீகாரின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்று சாதனை படைத்தார்.
5/7
டி20 அணி
ஐபிஎல் தவிர்த்து, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் அணிக்காக 1 முதல்தரப் போட்டி, 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2013ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று முழுநேர அரசியலில் களமிறங்கினார்.
6/7
டெல்லி U-15 கிரிக்கெட் அணி
உள்நாட்டுப் போட்டிகளில் டெல்லி U-15 கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தபோது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் தலைமையின் கீழ் தேஜஸ்வி யாதவ் விளையாடியுள்ளார்.
7/7
கிரிக்கெட் வீரர்
தேஜஸ்வி யாதவ் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர் ஆவார். 2008 முதல் 2012 வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும், அவருக்கு எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் ஆடும் லெவனில் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மாற்று வீரராக மட்டுமே இருந்தார்.