கார்த்திக் சுப்பராஜின் டோரதி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருப்பதை அடுத்து, அவருடைய எல்லா படத்திலும் அவரது மனைவி நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ முழு விவரம்.
கார்த்தி சுப்பராஜ், பீட்சா திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து, இவர் இயக்கிய எல்லா படத்திலும் கார்த்திக் சுப்புராஜ் அவருடைய மனைவியை நடிக்க வைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ அது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
கார்த்திக் சுப்புராஜ் மனைவி
தமிழ் திரையுலகில், முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார், கார்த்திக் சுப்புராஜ். இவர், பீட்சா திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். குறும்படங்களை எடுத்து, தன் திறமையை காண்பித்த இவருக்கு, பிறகு வெள்ளித்திரையில் இயக்கத்தின் மூலமாக ஜொலிக்க வாய்ப்பு கிடைத்தது.
2/5
கார்த்திக் சுப்புராஜ் மனைவி சத்ய பிரேமா
கார்த்திக் சுப்புராஜின் மனைவியின் பெயர், சத்ய பிரேமா. இவர்களுக்கு 2011ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. சத்ய பிரேமா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய எல்லா படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
3/5
சத்ய பிரேமா கேமியோ ரோல்
கார்த்திக் சுப்புராஜின் மனைவி சத்ய பிரேமா, தன் கணவர் இயக்கிய படத்தில் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறாரே தவிர, பெரிய கேரக்டரில் எல்லாம் வந்ததில்லை.
4/5
பீட்சா ஜிகிர்தண்டா படங்களில் கேமியோ
பீட்சா படத்தில் ஒரு காட்சியிலும், ஜிகர்தண்டா படத்தில், நாளைய இயக்குநர் போட்டியாளராக அமர்ந்திருப்பார். இறைவி படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்திருப்பார். மெர்குரி படத்தில் மெர்குரி மெமோரியல் எனும் நிகழ்ச்சியில், ஒரு ஆளாக அமர்ந்திருப்பார்.
5/5
ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருப்பார்
பேட்ட படத்தில் கூட ரஜினிகாந்திற்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுக்கும் ஊழியராக நடித்திருப்பார், கார்த்திக் சுப்புராஜின் மனைவி. அதே போல, ஜகமே தந்திரம் படத்திலும் தனுஷ் செய்யும் கொலையை பார்க்கும் ஆளாக இருப்பார். மகான் படத்தில் சாராயத்திற்கு எதிராக போராடும் போராளியாக வருவார், சத்ய பிரேமா. அதே போல, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் சாமியாராக நடித்திருப்பார்.