• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தீபாவளி: தென் மாவட்ட பயணிகளுக்கு குஷி.. தென்காசி, குமரிக்கு சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு எப்போது?

தீபாவளி: தென் மாவட்ட பயணிகளுக்கு குஷி.. தென்காசி, குமரிக்கு சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு எப்போது?

Written ByUmabarkavi K
Published: Nov 02, 2026, 01:56 PM IST|Updated: Nov 02, 2026, 02:00 PM IST
joinshare
Diwali Special Trains: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Diwali Special Trains: தீபாவளி பண்டிகைக்கு நெருங்கி வரும் நிலையில், தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

Diwali Special Trains1/5

தீபாவளி சிறப்பு ரயில்கள்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள். இதனால், ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, ரயில்களில் சொல்லவே வேண்டாம். ஏற்கனவே, ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இந்த நிலையில்தான், பயணிகளுக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
Diwali Special Trains2/5

தென் மாவட்ட பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள்

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி, தாம்பரம் - தென்காசி, செங்கோட்டை - தாம்பரம் வழித்தடத்தில் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு, பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Diwali Special Trains3/5

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்

ரயில் எண் 06151 என்ற எண் கொண்ட சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நவம்பர் 5ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கன்னியாகுமரி சென்டையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் நவம்பர் 9ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எழும்பூர் சென்றடைகிறது.
Diwali Special Trains4/5

தாம்பரம் - தென்காசி வழித்தடத்தில் சிறப்பு ரயில்

மேலும், ரயில் எண் 06049 எண் கொண்ட ரயில் தாம்பரம் - தென்காசி வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நவம்பர் 7ஆம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மாலை 4.45 மணிக்கு தென்காசி சென்றடைகிறது.
Diwali Special Trains5/5

செங்கோட்டை - தாம்பரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

இதன் மறுமார்க்கத்தில் ரயில் எண் 06050 எண் கொண்ட செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 3) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
TAGS:
Southern Railway

Trending

  • News
  • Photos
  • Videos
நள்ளிரவில் கரையை கடக்கும் 'முரசு' புயல்.. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

நள்ளிரவில் கரையை கடக்கும் 'முரசு' புயல்.. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

2

”எனக்கு யாருமில்லை..” ஆதரவற்ற இளைஞர் வீடியோ! விலை உயர்ந்த பரிசுகளுடன் வந்த 10 ஆயிரம் பேர்

3

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் செய்தி! பள்ளியிலேயே JEE, NEET பயிற்சி

4

ஹர்திக் பாண்டியாவுக்கு 2 ஆண்டுகள் தடை? ஐபிஎல்லிலும் விளையாட முடியாது? பிசிசிஐ அதிரடி!

5

IDBI வங்கியை கைப்பற்றும் ஃபேர்ஃபாக்ஸ்.. அடுத்ததாக 3 நிறுவனங்களை வாங்கவும் திட்டம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.