duplicate ration card : நகல் ரேஷன் கார்டு பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? யார் விண்ணப்பிக்க வேண்டும்?
duplicate ration card : நகல் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது தொடர்பான முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/5
யார் விண்ணப்பிக்கலாம்?
யார் விண்ணப்பிக்கலாம்? : ஸ்மார்ட் ரேஷன் கார்டு தொலைந்து போனவர்கள், சேதமடைந்தவர்கள் அல்லது கார்டில் உள்ள விவரங்கள் மங்கிப் போய் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் உடனடியாக நகல் ரேஷன் கார்டுக்கு (Duplicate Ration Card) விண்ணப்பிக்கலாம்.
2/5
ஆன்லைனில் தொடங்குவது எப்படி?
ஆன்லைனில் தொடங்குவது எப்படி? : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in பக்கத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்' பிரிவில் 'நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
3/5
பதிவு செய்த மொபைல் எண்
பதிவு செய்த மொபைல் எண், ஓடிபி : ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்பத் தலைவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும். தொடர்ந்து, திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி (OTP) எண்ணைப் பதிவு செய்து உள்ளே நுழையலாம்
4/5
ஆவணப் பதிவேற்றம்
4. காரணம் மற்றும் ஆவணப் பதிவேற்றம் : புதிய கார்டு கோருவதற்கான காரணத்தைத் (கார்டு தொலைந்துவிட்டது / சேதமடைந்துவிட்டது) தேர்ந்தெடுக்க வேண்டும். அட்டை தொலைந்து போயிருந்தால் காவல்துறை சான்றிதழ் அல்லது சேதமடைந்த கார்டின் நகலை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
5/5
கட்டணம் செலுத்தி கார்டு பெறுதல்
5. கட்டணம் செலுத்தி கார்டு பெறுதல் : விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை (ரூ.20) ஆன்லைனில் செலுத்த வேண்டும். கார்டு தயாரானதும் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் வரும்; அதன்பின் உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று புதிய நகல் ஸ்மார்ட் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.