EPF Contributions: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல். மாதா மாதம் உங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் பிஎஃப் தொகை உங்கள் பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படுகிறதா? இதை எப்படி அறிவது?
EPF Contributions: இபிஎஃப் தொகையை நிறுவனம் கணக்கில் செலுத்தி விட்டதா? சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சம்பளச் சீட்டை மட்டும் பார்த்தால் போதாது. தங்களின் பங்களிப்புகள் உண்மையில் EPF கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். சில சமயங்களில் பணம் செலுத்துவதில் தாமதம், குறைவான தொகையைச் செலுத்துதல் அல்லது பங்களிப்புகளைச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களால், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் தொகை குறைவாக இருக்கலாம்.
1/8
இபிஎஃப் உறுப்பினர்கள் கவனத்திற்கு
புகார் அளிக்கும் முன் சம்பளச் சீட்டுகள், EPF பாஸ்புக் அறிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய வேலைவாய்ப்புப் பதிவேடுகளை ஆதாரங்களாக வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். EPF வைப்புகளைத் தவறாமல் சரிபார்ப்பது, ஊழியர்கள் முரண்பாடுகளை முன்கூட்டியே கண்டறியவும், ஒரு நிறுவனம் தனது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றத் தவறுவதால் தங்களின் ஓய்வூதிய சேமிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் உதவும்.
2/8
நிறுவனம் பிஎஃப் (PF) தொகையைச் செலுத்துகிறதா என்பதைச் சரிபார்ப்பது எப்படி?
ஊழியர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணைப் (UAN) பயன்படுத்தி, EPFO உறுப்பினர் இணையதளத்தில் உள்நுழைந்து, மாதாந்திர பிஎஃப் பங்களிப்புகளைச் சரிபார்க்கலாம். EPF பாஸ்புக்கில், ஊழியரின் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் பொருந்தக்கூடிய இடங்களில் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கான (EPS) பங்களிப்பு என, ஒவ்வொரு மாதத்திற்குமான விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
3/8
பிஎஃப் உறுப்பினர்களுக்கான தகவல்
பாஸ்புக்கில் உள்ள பதிவுகளை, சம்பளச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிஎஃப் பிடித்தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஏதேனும் ஒரு மாதத்திற்கான பதிவு விடுபட்டிருந்தாலோ, எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவான தொகை வைப்பு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது நிறுவனத்தின் பங்களிப்பு விடுபட்டிருந்தாலோ, அது ஒரு முரண்பாட்டைக் குறிக்கிறது. இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.
4/8
EPFO வாட்ஸ்அப் வசதி
ஊழியர்கள் EPFO-வின் வாட்ஸ்அப் (WhatsApp) வசதியைப் பயன்படுத்தியும் தங்கள் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம், கடைசி ஐந்து பரிவர்த்தனைகளைப் பார்க்கலாம் மற்றும் பாஸ்புக்கை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். EPFO-வின் சரிபார்க்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணான +91 8796441800 என்ற எண்ணிற்கு 'Hi' என்று செய்தி அனுப்பி இந்தச் சேவையைப் பெறலாம்.
5/8
நிறுவனம் பிஎஃப் தொகையை செலுத்தத் தவறினால் என்னவாகும்?
EPF விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும் முடிந்த 15 நாட்களுக்குள் நிறுவனங்க்ள் பங்களிப்புகளைச் செலுத்த வேண்டும். பொருந்தக்கூடிய விதிகளுக்கு உட்பட்டு, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் தலா 12 சதவீதத்தை ஊழியரும் நிறுவனமும் EPF-க்காகச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பிடித்தம் செய்யப்பட்ட தொகையைச் செலுத்தத் தவறினால், EPF சட்டத்தின் பிரிவு 7Q-ன் கீழ் அபராத வட்டியும், பிரிவு 14B-ன் கீழ் இழப்பீட்டுத் தொகையும் விதிக்கப்படலாம்.
6/8
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
EPFO-வின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பகுதியின்படி, நிறுவனம் பணத்தைச் செலுத்துவதில் தாமதம் செய்தாலும், ஊழியர்கள் தங்கள் பங்களிப்பிற்கான வட்டிக்கு உரிமையுடையவர்களே. இதற்கான அபராத வட்டி மற்றும் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் பொறுப்பு நிருவனத்தையே சாரும்.
7/8
இபிஎஃப் உறுப்பினர்கள் புகார் அளிப்பது எப்படி?
விடுபட்ட பிஎஃப் பங்களிப்புகள் குறித்து ஊழியர்கள் புகார் அளிக்கலாம். ஒரு ஊழியர், தனது நிறுவனம் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (PF) பிடித்தம் செய்துவிட்டு, அதை வங்கியில் செலுத்தத் தவறியதைக் கண்டறிந்தால், EPF i-குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு (EPFiGMS) மூலம் புகார் அளிக்கலாம். ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளிக்கலாம்.
8/8
EPF வைப்பு
புகார் அளிக்கும் முன் சம்பளச் சீட்டுகள், EPF பாஸ்புக் அறிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய வேலைவாய்ப்புப் பதிவேடுகளை ஆதாரங்களாக வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். EPF வைப்புகளைத் தவறாமல் சரிபார்ப்பது, ஊழியர்கள் முரண்பாடுகளை முன்கூட்டியே கண்டறியவும், ஒரு நிறுவனம் தனது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றத் தவறுவதால் தங்களின் ஓய்வூதிய சேமிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் உதவும்.