• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /EPS மாத ஓய்வூதியத்தில் 3 மடங்கு ஏற்றமா? நவம்பர் 19 முக்கிய EPFO CBT கூட்டம்

EPS மாத ஓய்வூதியத்தில் 3 மடங்கு ஏற்றமா? நவம்பர் 19 முக்கிய EPFO CBT கூட்டம்

Written BySripriya Sambathkumar
Published: Nov 17, 2026, 16:16 IST|Updated: Nov 17, 2026, 16:23 IST
joinshare
EPS Pension Hike: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நவம்பர் 19-ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாக அமையக்கூடும். இபிஎஸ் குறைந்தபட்ச மாத இந்த விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் என்சிபிஏ (NCPA) எதிர்பார்க்கிறது.

EPS Minimum Pension Hike: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) 24-வது கூட்டம், 2026 நவம்பர் 19 அன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO Members1/8

இபிஎஃப் உறுப்பினர்கள் கவனத்திற்கு

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல் உள்ளது. இன்னும் 2 நாட்களில் அவர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஓய்வூதியத் தொகையில் உயர்வுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு கூடிய விரைவில் இது தொடர்பான நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
Central Board of Trustees2/8

மத்திய அறங்காவலர் குழு கூட்டம்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) 24-வது கூட்டம், 2026 நவம்பர் 19 அன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Will Minimum Monthly Pension increase form Rs.1,000 to 3,0003/8

குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹1,000-லிருந்து ₹3,000-ஆக உயருமா?

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை தற்போதைய ₹1,000-லிருந்து ₹3,000-ஆக அரசு உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ​​EPS திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ₹1,000 பெறுகின்றனர். இந்தத் தொகையை ₹3,000-ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
Minimum Monthly Pension4/8

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான அரசு இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தால், குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் மாதாந்திர வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். சில முக்கிய தரவுகள் இதோ: தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியம்: ₹1,000. முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்: ₹3,000. மாதாந்திர உயர்வு (வாய்ப்புள்ள தொகை): ₹2,000. ஆண்டு உயர்வு (வாய்ப்புள்ள தொகை): ₹24,000
Minimum Pension5/8

குறைந்தபட்ச ஓய்வூதியம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹3,000-ஆக உயர்த்தப்பட்டால், ஓய்வூதியதாரர்கள் தற்போது பெறுவதை விட ஆண்டுக்கு கூடுதலாக ₹24,000 பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த கணக்கீடு முன்மொழியப்பட்ட உயர்வை அடிப்படையாகக் கொண்டது மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஓய்வூதியத்தை ₹3,000-ஆக நிர்ணயிப்பதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
EPS Pension Hike6/8

2014-ஆம் ஆண்டிலிருந்து குறைந்தபட்ச ஈபிஎஸ் (EPS) ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படவில்லை

ஈபிஎஸ் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹1,000-ஆக நிர்ணயிக்கும் முன்மொழிவு 2014 பிப்ரவரியில் அங்கீகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2014–2015-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இது அறிவிக்கப்பட்டு, 2014 ஆகஸ்டில் அரசு இது குறித்த அறிவிக்கையை வெளியிட்டது. இந்த நடைமுறை 2014 செப்டம்பர் முதல் அமலுக்கு வந்தது.
Minimum Monthly Pension7/8

குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை

2014-க்குப் பிறகு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணியாளர் அமைப்புகள் நீண்டகாலமாக இந்தத் தொகையை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன. இவர்களில் பல அமைப்புகள், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ₹7,500-ஆக உயர்த்துவதுடன், அதனுடன் அகவிலைப்படியையும் (Dearness Allowance - DA) வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
November 19 CBT Meeting8/8

நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள சிபிடி கூட்டம்

நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள சிபிடி (CBT) கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் குறித்து இபிஎஃப்ஓ (EPFO) என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதை பலரும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். குறிப்பாக, கூடுதல் ஈபிஎஸ் (EPS) ஓய்வூதியத்திற்கான நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களின் நிலை, மற்றும் முறையான விசாரணை இன்றி கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவது போன்ற விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவை ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
TAGS:
EPFO

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.