• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை.. தமிழக அரசின் குட் நியூஸ்... யாரெல்லாம் பெறலாம்?

தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை.. தமிழக அரசின் குட் நியூஸ்... யாரெல்லாம் பெறலாம்?

Written ByUmabarkavi K
Published: Nov 03, 2026, 04:36 PM IST|Updated: Nov 03, 2026, 04:43 PM IST
joinshare
Diwali Free Dhoti Sarees: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 3ஆம் தேதியான இன்று முதல் வேட்டி, சேலை வழங்கப்படும் என வெளியிட்டுள்ளது. நவம்பர் 7ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Diwali Free Dhoti Sarees: யாரெல்லாம் வேட்டி, சேலை பெறலாம் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்
 

Diwali Free Dhoti Sarees1/5

விலையில்லா வேட்டி, சேலை திட்டம்

தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
Diwali Free Dhoti Sarees2/5

ரேஷன் கடைகளில் நவம்பர் 7ஆம் தேதி வரை பெறலாம்

அதன்படி, தீபாவளி 2026 பண்டிகைக்கான வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு இன்று (03.11.2026) முதல் வழங்கப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 07.11.2026-க்குள் தங்களது நியாய விலைக் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
Diwali Free Dhoti Sarees3/5

முதியோர், ஓய்வூதியதாரார் வேட்டி, சேலை பெறலாம்

பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் எவ்வித தாமதமுமின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய கூட்டுறவுத் துறை அலுவலர்கள் நியாய விலைக் கடைகளுக்கான நகர்வு மற்றும் விநியோகப் பணிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். எனவே, நவம்பர் 7ஆம் தேதி ரை தங்களுக்குரிய ரேஷன் கடைகளில் நேரில் சென்று விலையில்லா வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Diwali Free Dhoti Sarees4/5

200 ரூபாய் விலையில் 10 வகையான மளிகைப் பொருட்கள்

மேலும், தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்காக 200 ரூபாய் விலையில் 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுதி கூட்டுறவு அங்காடிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் பூண்டு, மல்லி, புளி, கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய் என 10 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் இதனை பெற்றுக் கொள்ளலாம்.
Diwali Free Dhoti Sarees5/5

தீபாவளிக்கு முன்பே வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

மேலும், வயதான ரேஷன் பயனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. நவம்பர் 4,5ஆம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படியாக தீபாவளிக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : பசுமை பட்டாசு மட்டும்தான் தீபாவளிக்கு வெடிக்க வேண்டும்! Green Crackers என்றால் என்ன?

Explained : பசுமை பட்டாசு மட்டும்தான் தீபாவளிக்கு வெடிக்க வேண்டும்! Green Crackers என்றால் என்ன?

2

IND டி20 அணியில் புதிய மாற்றங்கள்? இவர்களுக்கெல்லாம் ஆபத்து! கம்பீர் திட்டம் என்ன? Explained

3

சொத்து குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

4

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? வானரப்பேட்டையில் ரத்தக் களரி

5

8வது ஊதியக் குழு: 1 ஆண்டு நிறைவு... அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட் என்ன? அமலாக்கம் எப்போது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.