• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கஜகேசரி ராஜயோகம்: நவம்பர் 30 டூ டிசம்பர் 2... இந்த 3 ராசிகளுக்கு சிறப்பான நாட்கள்

கஜகேசரி ராஜயோகம்: நவம்பர் 30 டூ டிசம்பர் 2... இந்த 3 ராசிகளுக்கு சிறப்பான நாட்கள்

Written BySudharsan G
Published: Nov 21, 2026, 14:03 IST|Updated: Nov 21, 2026, 14:06 IST
joinshare
சிம்ம ராசியில் குரு - கேது இருக்கும் வேளையில் வரும் நவம்பர் 30ஆம் தேதி அன்று சந்திரனும் அந்த ராசியில் பெயர்ச்சி அடைகிறார். சந்திரன் - குரு சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகும். இதனால் பலனடையும் 3 ராசிக்காரர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

சந்திரன் இரண்டரை நாட்கள் மட்டுமே ஒரு ராசியில் தங்குவார். அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைந்துவிடுவார். நவம்பர் 30ஆம் தேதி சிம்ம ராசிக்கு வரும் சந்திரன், டிசம்பர் 2ஆம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், நவம்பர் 30 - டிசம்பர் 2 வரை கஜகேசரி ராஜயோகம் நீடிக்கும். இந்த காலகட்டத்தில் 3 ராசிகளுக்கு பலன்கள் வந்து சேரும்.

Gajakesari Rajayogam1/6

கஜகேசரி ராஜயோகம்

ஜோதிடத்தின்படி, கஜகேசரி ராஜயோகம் மிகவும் சுபமான யோகங்களில் ஒன்றாகும். குரு - சந்திரன் இணைந்தாலோ அல்லது இரண்டும் மைய நிலைக்கு வந்தாலோ இந்த ராஜயோகம் உண்டாகும். கஜகேசரி ராஜயோகம் வாழ்வில் மகிழ்ச்சியையும், மரியாதையையம், அறிவாற்றலையும், செழிப்பையும் கொண்டுவரும். பொருளாதார நிலையையே மாற்றும்.
Gajakesari Rajayogam2/6

3 ராசிகளுக்கு நன்மை

ஜோதிடத்தின்படி வரும் நவம்பர் 30ஆம் தேதி அன்று காலை 9.41 மணிக்கு சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். டிசம்பர் 2ஆம் தேதிவரை சந்திரன் சிம்ம ராசியில் இருப்பார். ஏற்கெனவே அங்கு குரு - கேது வீற்றிருக்கிறார்கள். குருவுடன் சந்திரன் இணையும் போது கஜகேசரி ராஜயோகம் உண்டாகிறது. இதனால், வரும் நவம்பர் 30ஆம் தேதிமுதல் டிசம்பர் 2ஆம் தேதிவரை உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் மூன்று ராசிகளுக்கு சுபமானதாக அமையும். அந்த 3 ராசிகள் குறித்து இங்கு காணலாம்
Gajakesari Rajayogam3/6

கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

கஜகேசரி ராஜயோகத்தால் கடக ராசிகளுக்கு பலன்கள் வந்து சேரும். கிடப்பில் இருந்து வேலைகள் நிறைவேறும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். கடின உழைப்புக்கு பாராட்டுகள் வந்து சேரும். வணிகர்களுக்கும் உகந்த காலமாகும், புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். புதிய இடத்தில் வருமானமும் வரும், பொருளாதாரம் சீராகும். காதல் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். உங்கள் இணையருடன் சுற்றுலா செல்வீர்கள்.
Gajakesari Rajayogam4/6

சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்

கஜகேசரி ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் தரும். இந்த காலகட்டத்தில் நம்பிக்கை அதிகரிக்கும், உங்களின் வேலையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக புதிய வேலையை தேடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களை தேடி புதிய பொறுப்புகள் வரும். மேலதிகாரிகள் உங்களின் வேலையை பாராட்டுவார்கள். இதனால் பணி உயர்வு அல்லது போனஸ் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்களுக்கும் இது நல்ல காலம்தான். பொருளாதார ரீதியாக நல்ல நிலையை எட்டுவீர்கள். புதிய வருமானங்களல் வரும். பழைய முதலீடுகளில் லாபமும் வரும். குடும்ப வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் ஒருங்கே வந்துசேரும். இணையருடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள்.
Gajakesari Rajayogam5/6

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

கஜகேசரி ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு சுபமான வாய்ப்புகள் தேடி வரும். இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி தேடி வரும். வணிகர்களுக்கு புதிய தொடர்புகள் உண்டாகும். நல்ல லாபமும் வரக்கூடிய காலகட்டமாகும். ஊழியர்களுக்கு புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். உங்களின் தலைமைத்துவ பண்புகள் அதிகரிக்கும், பொறுப்புகள் தேடி வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு நல்ல காலமாகும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். பொருளாதார நிலை வலுவடையும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
Gajakesari Rajayogam6/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.