நடிகர் அர்ஜுன் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ஜென்டில்மேன் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்திய திரைப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றான படம் 'ஜென்டில்மேன்'. இதையடுத்து இப்படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
1/5
33 வருடம் கழித்து ரீ-ரிலீஸ்
33 வருடம் கழித்து மீண்டும் திரைக்கு வரும் 'ஜென்டில்மேன்' மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனின் மெகாபிளான். படம் எப்போது ரீ-ரிலீஸ் ஆகிறது தெரியுமா? இதோ முழு விவரம்!
2/5
ஜெண்டில்மேன் திரைப்படம்
இந்திய திரைப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றான படம் 'ஜென்டில்மேன்'. மீண்டும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர மெகா தயாரிப்பாளர் குஞ்சுமோன் பிரமாண்டமாக முடிவு செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 11- ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த மறு வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் வகையில், புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளனர்.
3/5
1993 ஜெண்டில்மேன் திரைப்படம்
1993-ல் வெளியான 'ஜென்டில்மேன்' திரைப்படம், S.ஷங்கர் இயக்குநராக அறிமுகமான படைப்பாகும்; இவரது திரைக்கதை, பிரமாண்ட காட்சி அமைப்பு, பாடல்களை உருவாக்கிய விதம் என்று இப்படம் ஷங்கருக்கு சினிமாவில் தனி இடத்தை கொடுத்தது. இதன் மூலம் தனது பாணியில் கலைஞர்களை உருவாக்க முடியும் என்று நிரூபுத்து காட்டியவர் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். 800க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்த அனுபவங்கள் மூலம் இந்த மாதிரி மெகா படங்களை தனது கமர்சியல் பாணியில் உருவாக்கினார்.
4/5
படக்குழுவினர்
பால குமரன் வசனங்களை எழுத, ' கவிப்பேரரசு ' வைரமுத்து மற்றும் ' கவிஞர் ' வாலி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக தோட்டா தரணியும், படத்தொகுப்பாளர்களாக V.T. விஜயன் மற்றும் B. லெனினும் பணியாற்றியுள்ளனர்.
5/5
ஜெண்டில்மேன் ரீ-ரிலீஸ்
இப்படம் இப்போது 4K அல்ட்ரா ஹெச்டி (4K Ultra HD) காட்சித் தரம் மற்றும் மேம்படுத்தப்பட் 7.1 சரவுண்ட் சவுண்ட் (7.1 suround sound) என நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது. கிரேஸ் ஃபிலிம் மீடியா (Grace Film Media) பேனரின் அனில் குமார் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.
டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ள ‘ஜென்டில்மேன்’, 1990-களின் பொற்காலத் தமிழ் சினிமாவின் நினைவுகளை மீண்டும் பெரிய திரையில் கொண்டு வர உள்ளது.