ரூபாய் மதிப்பு சரிவு, சீனாவின் தங்க கொள்முதல் மற்றும் கேஷ் கோல்டு விற்பனை உள்ளிட்ட காரணிகள் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
1/5
ரூபாய் சரிவு.. தங்கத்துக்கு என்ன பாதிப்பு?
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தாலும், இந்தியாவில் அதே அளவுக்கு விலை சரியாமல் இருப்பதற்கு ரூபாயின் மதிப்பு சரிவு முக்கிய காரணமாக இருக்கலாம் என பொருளாதார நிபுனர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாண்ட் ஈல்ட் மற்றும் ரூபாய் மதிப்பு போன்ற காரணிகள் இந்திய தங்க சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2/5
தங்கத்துக்கு ஆதரவாக சீனா
சர்வதேச தங்கச் சந்தையில் தற்போது மாறுபட்ட சூழல் நிலவுகிறது. ஒருபுறம் அமெரிக்காவின் வட்டி விகிதம் மற்றும் பாண்ட் ஈல்ட் தொடர்பான மாற்றங்கள் தங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், மறுபுறம் சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருவது விலைக்கு ஆதரவாக இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் கூறினார்.
3/5
பில் இல்லாமல் தங்கம் வாங்கும் மக்கள்?
இந்தியாவில் பில் இல்லாமல் அல்லது வரி செலுத்தாமல் தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்து வருவதாக சில அறிக்கைகள் கூறுகிறது. குறிப்பாக கேஷ் மூலம் வாங்கப்படும் தங்கத்துக்கும் முறையான வங்கி பரிவர்த்தனை மூலம் வாங்கப்படும் தங்கத்துக்கும் விலையில் வித்தியாசம் இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
4/5
கேஷ் கோல்டில் ரூ. 500 - 700 வித்தியாசம்?
சந்தையில் கேஷ் மூலம் வாங்கப்படும் தங்கத்துக்கும் முறையான பரிவர்த்தனை மூலம் வாங்கப்படும் தங்கத்துக்கும் சுமார் ரூ. 500 முதல் ரூ. 700 வரை விலை வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகமானோர் குறைண்ட்6ஹ விலையில் கிடைக்கும் கேஷ் கோல்டை வாங்கி செல்வதாக ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டார்.
5/5
65% வரி உயர்வால் வந்த பிரச்சனையா?
தங்கம் தொடர்பான வரி அல்லது கட்டணங்களில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவில் உயர்வு ஏற்படுத்தப்பட்டால் மக்கள் மாற்று வழிகளில் தங்கத்தை வாங்க முயற்சிக்கும் சூழல் உருவாகலாம் என ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் முறையான தங்க விற்பனைக்கு வெளியே சந்தை உருவாக வழிவகுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்கத்தின் ஹால்மார்க் நடமுறையிலும் முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் கூறினார்.