• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /மழைக்கால நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? CM விஜய் அறிவிப்பு!

மழைக்கால நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? CM விஜய் அறிவிப்பு!

Written ByUmabarkavi K
Published: Nov 16, 2026, 13:03 IST|Updated: Nov 16, 2026, 13:10 IST
joinshare
தமிழக அரசு உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.5,000 வழங்கி வந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மழைக்காலத்தில் பாதிக்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
 

TN Govt Salt Workers Relief Hike1/5

உப்பளத் தொழிலாளர்களுக்கான நிவாரணம் உயர்வு

தமிழக அரசு பலதரப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர்களுக்கு நிவாரணம், மானியம் என பலவற்றை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Govt Salt Workers Relief Hike2/5

ரூ.7,000 ஆக மழைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும்

இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு "வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பார்வை" என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000/-லிருந்து ரூ.7,000/- ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது.
TN Govt Salt Workers Relief Hike3/5

முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

அதன் அடிப்படையில், தொழில் துறை அமைச்சர் அவர்கள் 25.08.2026 அன்று நடைபெற்ற தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக்கோரிக்கையின்போது "உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000/-லிருந்து ரூ.7,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
TN Govt Salt Workers Relief Hike4/5

தமிழக அரசு அரசாணை வெளியீடு

அதன்படி, உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் உப்புத் தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000/-லிருந்து ரூ.7,000/-ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆணையிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
TN Govt Salt Workers Relief Hike5/5

23,979 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள்

இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக 2026-2027ஆம் ஆண்டில் 23,979 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள். இதன்மூலம் இந்த ஆண்டிற்கு ஏற்படும் 16.78 கோடி ரூபாய் செலவினை அரசே ஏற்கும் என தமிழக அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
TAGS:
Vijay Thalapathy

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.