Jupiter Transit: அக்டோபர் 31 ஆம் தேதி நடக்கவுள்ள குரு பெயர்ச்சி 5 ராசிகளுக்கு ராஜயோகத்தைக் கொண்டு வரும். உங்கள் ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்?
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில், குரு பகவான் ஞானம், அதிர்ஷ்டம், கல்வி, புத்திர பாக்கியம், திருமணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரகராகக் கருதப்படுகிறார். அக்டோபர் 31 சிம்ம ராசியில் நிகழும் குரு பெயர்ச்சி தொழில், தலைமைத்துவத் திறன், படைப்பாற்றல் சார்ந்த முயற்சிகள் மற்றும் நிதி சார்ந்த முடிவெடுத்தல் ஆகியவற்றில் தாக்கத்தை எற்படுத்தும்.
1/8
குரு பெயர்ச்சி பலன்கள்
அக்டோபர் 31 நிகழவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 5 ராசிகளில் இதனால் அற்புதமான நன்மைகள் நடக்கும். இந்த காலத்தில் வெற்றிகள் பல குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
2/8
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு, குரு பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிகார்ரகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த காலகட்டம் அறிவு, மாணவர்களுக்கான கல்வி, புத்திர பாக்கியம், காதல் உறவுகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் சாதகமாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். ஊடகம், எழுத்து, சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), வடிவமைப்பு அல்லது பொழுதுபோக்குத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
3/8
கடகம்
கடக ராசியினருக்கு குரு பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும், குழந்தைகளால் நன்மை உண்டாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடக ராசியினர் இந்த காலத்தில் தங்கள் நிதி நிலையை மேம்படுத்தவும், செலவுகளைச் சீரமைக்கவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தொகைகளைப் பெறுவதிலும் கவனம் செலுத்தலாம். வணிகத்தில் உள்ளவர்களுக்கு இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு நகரும்போது, நிதி விவகாரங்கள் தொடர்பாக புதிய முன்னுரிமைகள் உருவாகலாம். அதிக வருமானம் ஈட்டும் நோக்கில் தேவையற்ற அபாயங்களை எடுப்பதற்குப் பதிலாக, சேமிப்பு மற்றும் வரவு-செலவுத் திட்டமிடலில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்.
4/8
துலாம்
துலாம் ராசியினருக்கு, சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். குழந்தைகளால் மக்ழிச்சி உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு, பழைய அறிமுகங்கள் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் அல்லது திட்டங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கலாம். தொழில் முனைவோர்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து மீண்டும் வணிக வாய்ப்புகளைப் பெறவும் அல்லது தங்கள் நெட்வொர்க்கை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தவும் திட்டமிட இது நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் குரு பகவானின் அருளால் பண வரவு அதிகமாகும்.
5/8
தனுசு
குரு பகவான் தனுசு ராசியின் அதிபதி ஆவார். சிம்ம ராசியில் நிகழவுள்ள குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான நன்மைகளை அளிக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் வாழ்வில் பல வித வெற்றிகள் கிடைக்கும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு, தங்கள் தொழில்முறை உத்திகளை மேம்படுத்திக்கொள்ளவோ அல்லது புதிய வாய்ப்புகளை ஆராயவோ வழி பிறக்கலாம். மேலும், வெளிநாட்டு விவகாரங்கள், பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அறிவுத் தேடல் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கக்கூடும்.
6/8
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் சிம்ம ராசி பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் சிலருக்கு நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, புதிய கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் அல்லது வணிக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடையக்கூடும். தொழில்முறைச் சூழலில், மற்றவர்களுடன் நல்லுறவைப் பேணுவது சாதகமான பலன்களைத் தரும். குரு பகவானின் இந்தப் பெயர்ச்சி பல்வேறு வாய்ப்புகளைக் கொண்டு வந்தாலும், சரியான முடிவுகளை எடுப்பது மிக அவசியமாகும். பண வரவு அதிகமாகும்.
7/8
குரு பகவானின் அருள் பெற
குரு பகவானின் அருள் பெற தினமும் 'ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு: ப்ரசோதயாத்' என்ற குரு காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
8/8
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.