• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /பாரதிராஜா to தேவா..2026ஆல் தமிழ் சினிமா இழந்த 6 திரை பிரபலங்கள்! மீள முடியாத சோகம்..

பாரதிராஜா to தேவா..2026ஆல் தமிழ் சினிமா இழந்த 6 திரை பிரபலங்கள்! மீள முடியாத சோகம்..

தமிழ் திரையுலகம், இந்த வருடத்தில் மட்டும் 6 திரை பிரபலங்களை இழந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 21, 2026, 02:18 PM IST|Updated: Oct 21, 2026, 02:33 PM IST
joinshare
பாரதிராஜா to தேவா..2026ஆல் தமிழ் சினிமா இழந்த 6 திரை பிரபலங்கள்! மீள முடியாத சோகம்..
Image Credit: Tamil Cinema Lost Celebrities 2026 | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

2

டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்ட அரசியல்... ஒரே மேடையில் மாணவர்கள், விவசாயிகள், பிரபலங்கள்!

3

Explained: இந்தியன் ரயில்வே முக்கிய அப்டேட்... அக்டோபர் 27 முதல் இந்த பயணிகளுக்கும் காப்பீடு கிடைக்கும்!!

4

எஸ்பிஐ வங்கியில் சைபர் தாக்குதல்... டார்க் வெப்பில் கசிந்த வாடிக்கையாளர் விவரங்கள் - என்னாச்சு?

5

ஜந்தர் மந்தர் போராட்ட வழக்கில் புதிய திருப்பம்: CJP தலைவர்கள் மனுவை வாபஸ் பெற்றது ஏன்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கோலிவுட் திரையுலகின் முக்கிய பிரபலங்களாக இருந்த 6 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம், மீள முடியா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பாரதிராஜா:

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருந்தவர், பாரதிராஜா. ‘என் இனிய தமிழ் மக்களே..’ என்று இந்த வார்த்தைகளை படிக்கும் போதே அவருடைய வாய்ஸ்தான் கேட்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு படங்கள் இயக்குவதை நிறுத்திய இவர், முழு நேரமாக படங்களில் நடித்து வந்தார். தனக்கென வந்த அனைத்து கதாப்பாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாகவே நடித்து கொடுத்தார். குறிப்பாக, திருச்சிற்றம்பலம், திருவின் குரல், மார்கழி திங்கள், மகாராஜா, திருமாணிக்கம் உள்ளிட்ட படங்களை குறிப்பிடலாம். கடந்த சில நாட்களாக, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாரதிராஜா, தன்னுடைய 84வது வயதில் காலமானார். இவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்புதான் இவருடைய மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். பாரதிராஜா, கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி உயிரிழந்தார்.

பாக்யராஜ்:

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் இறப்பு யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. அதிலும், அவருடைய குருநாதராம பாரதிராஜா இறந்த சில நாட்களிலேயே அவரும் காலமாவார் என யாருமே நினைத்து கூட பார்க்கவில்லை.

எந்த கதையை எடுத்தாலும், அதில் நக்கலும் நையாண்டியும் கலந்து எழுதுவதும் வசனங்களை அதற்கு ஏற்றவாறு எழுதுவதும் இவரது சிறப்பு. இவர், தன்னுடைய 73வது வயதில், இந்த வருடத்தின் ஜூன் 27ஆம் தேதி உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு, கோவாவில் நடந்த குஷ்பு மகளின் திருமணத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.சௌத்ரி:

தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான ஐகானிக் படங்களில் பல படங்களை தயாரித்தவர், ஆர்.பி.சௌத்ரி. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் தலைவரான இவர் விக்ரமன் போன்ற பல்வேறு இயக்குநர்கள் திரையுலகில் வளர காரணமாக இருந்திருக்கிறார். இவர், கடந்த மே மாதம் 5ஆம் தேதி, ராஜஸ்தானில் உள்ள உதய்பூருக்கு சென்ற போது கார் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். 100 திரைப்படங்களுக்கும் மேல் தயாரித்திருக்கும் இவர் இறப்பு இந்த ஆண்டு திரையுலகின் பெரும் இழப்புகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

எஸ்.ஜானகி:

ஒரு சில பிரபலங்களின் இறப்பு, நம் மனதிற்கு ரொம்பவே நெருக்கமானதாக தோன்றும். அப்படிப்பட்ட ஒன்றுதான் பாடகி எஸ்.ஜானகியுடையது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 20க்கும் மேற்பட்ட மொழிகளில், கிட்டத்தட்ட 48,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்தான் எஸ்.ஜானகி. இவரை இசையுலகில் இருக்கும் பலர் ஜானகி அம்மா என்றும் அழைப்பதுண்டு. எந்த பாட்டு பாடினாலும், எந்த குரலில் பேசினாலும் தன் புருவமும் கண்களும் ஆடாத வண்ணம், அத்தனை நிதானத்துடன் பாடுவார், எஸ்.ஜானகி. இவர், இந்த ஆண்டின் ஜூலை 11ஆம் தேதி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடகாவில் உள்ள மைசூரில் உயிரிழந்தார். 60 வருடம் இசையுலகில் இருந்த இவருக்கு ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ எனும் இன்னொரு பட்டமும் உண்டு.

மேலும் படிக்க | தேவாவின் சகோதரர் மகன் 37 வயதில் மரணம்..! குடும்பத்தில் தொடரும் சோகம்..

சௌகார் ஜானகி:

பழம்பெரும் நடிகைகளுள் ஒருவராக விளங்கியவர் சௌகார் ஜானகி. இவர், உடலநலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த வருடத்தின் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சௌகார் ஜானகி, தன்னுடைய 94வது வயதில் உயிரிழந்தார். இவரது மறைவு, தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தேவா:

‘தேனிசை தென்றல்’ என அழைக்கப்பட்ட தேவாவின் இறுதி மூச்சு அக்டோபர் 17ஆம் தேதியன்று நின்றது. கானா பாடலை திரைத்துறையில் புகுத்தியவர், ‘கானா மட்டும் வராது, மெலடியும் வரும்’ என தன்னுடைய பாடல்கள் மூலம் நிரூபித்தவர்தான், தேவா.

இவருக்கு 75 வயதான நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு, இசையுலகை தாண்டி, இவர் பாடல்களை உருகி உருகி கேட்ட பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் மறைவில் இருந்து இன்னும் மீள முடியா துயரில் பலர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரூ.100 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியிருக்கும் வடிவேலு..உள்ளே என்னென்ன இருக்கு தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema