Group 2 Exam Hall Ticket: தமிழக அரசின் பெரும்பாலான பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வுகளை நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. அந்த வகையில், குரூப் 2,2ஏ முதல்நிலை தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், குரூப் 2,2ஏ முதல்நிலை தேர்வு ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:07/2026, நாள் 11.08.2026 மற்றும் பிற்சேர்க்கை எண் 7A/2026, நாள் 03.09.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி-2 மற்றும் 2A பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை (கொள்குறி வகை) (ஒளிக்குறி உணரி) தேர்வு 01.11.2026 முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://t.co/chsmTbpGfm
— TNPSC (@TNPSC_Office) October 21, 2026
ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகள் மூலம் மொத்தமாக 846 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 2 பிரிவில் 43 பணியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 803 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. குரூப் 2 பிரிவில் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், சிறை அலுவலர், உதவி ஆய்வாளர் போன்ற பதவிகள் நிரப்பப்படுகிறது.
குரூப் 2 ஏ தேர்வு மலம் தலைமைச் செயலக உதவியாளர், இளநிலை கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், தொழிற் கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாள்ர, உதவிப் பிரவு அலுவலர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ (Group 2, 2A) முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1, 2026 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஒரே வேளையில் நடைபெற உள்ளது.
தேர்வர்கள் 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு தேர்வு மையத்தின் கேட் மூடப்படும். எனவே, அதற்குள் தேர்வு வர வேண்டும். குரூப் 2 தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இலவச பயிற்சிகளை தமிழக அரசு நடத்துகிறது. எனவே, தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.