குரு பகவான் வரும் டிசம்பர் மாதம் சிம்ம ராசிக்குள் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் அந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் நிதி நிலையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும்.
குரு பகவான் வக்ர நிலையில் சிம்ம ராசிக்குள் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால், மேஷம், கடகம், சிம்மம் ஆகிய மூன்று ராசிக்காரர்களின் கைநழுவிப் போன பழைய வாய்ப்புகள் மீண்டும் துளிர்விடும் வாய்ப்புள்ளது.
1/7
குரு வக்ர பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கல்வி, அறிவு, திருமணம், செல்வம் மற்றும் வாழ்வின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு குரு பகவான் காரண கர்த்தாவாக இருப்பார். அவர் சிம்ம ராசியில் வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு, கைநழுவிப் போன பழைய வாய்ப்புகள் மீண்டும் துளிர்விடும் வாய்ப்புள்ளது. இதனால் தொழில் மற்றும் நிதி நிலையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
2/7
குரு வக்ர நிலை என்றால் என்ன?
ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் பின்னோக்கி நகர்வது போல் தோன்றும் நிலையே, வக்ர நிலை என்றழைக்கப்படுகிறது. குரு பகவான் வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் ஒருவர் தான் வாழ்க்கையில் எடுத்த அவசரமான முடிவுகளை மறு பரிசீலனை செய்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார். மேலும், கல்வி, பொருளாதாரம், எதிர்காலத் திட்டங்களைச் செப்பனிடுவதற்கும் சரியான காலமாக கருதப்படுகிறது.
3/7
டிசம்பரில் சிம்ம ராசியில் குரு வக்ர பெயர்ச்சி
அந்த வகையில், வரும் டிசம்பர் 13ஆம் தேதி (ஞாயிறு) காலை 6.25 மணிக்கு குரு பகவான் வக்ர நிலையில் சிம்ம ராசிக்குள் நுழைய இருக்கிறார். அடுத்து 2027 ஜனவரி 25ஆம் தேதி அன்று கடக ராசியிலும் குரு வக்ர சஞ்சாரம் மேற்கொள்கிறார். இதனால், சுமார் 122 நாட்கள் குரு பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். 2027 ஏப்ரல் 13ஆம் தேதி காலை 7.40 மணிக்கு அவர் நேர்கதி நிலைக்கு திரும்புவார். டிசம்பர் மாதம் சிம்ம ராசிக்குள் வக்ர நிலையில் குரு பகவான் பெயர்ச்சி அடைவதால் பயனடையும் 3 ராசிக்காரர்களை இங்கு காணலாம்.
4/7
மேஷம் - லாபம் கைக்கூடி வரும்
தொழில், வேலைவாய்ப்பில் கடந்த காலத் திட்டங்களை மறு ஆய்வு செய்ய இது உகந்த காலம் ஆகும். வேலை மாறுவதற்கு தங்களின் வியூகங்களை மாற்றி அமைத்து பலன் பெறலாம். பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் முடிவடையாமல் தேங்கிக் கிடந்த பணிகளில் இருந்து லாபம் கிடைக்கும். நிதி நிலையை உயர்த்த வீண் செலவுகளை கட்டுப்படுத்தி, எதிர்காலச் சேமிப்பைத் திட்டமிடுவது அவசியமாகும்.
5/7
கடகம் - பணப்புழக்கம் அதிகரிக்கும்
முன்னதாக நீங்கள் செய்து வைத்திருந்த முதலீடுகளுக்கு இப்போது லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் உங்களுக்கு திரும்பி வரும். பணியிடத்தில் உங்கள் திறணையை முழுமையாக வெளிக்காட்டும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பச் செலவுகளுக்கும் சேமிப்பிற்கும் இடையே சமநிலையைக் கடைபிடிப்பது நல்லது. புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை.
6/7
சிம்மம் - வெற்றி வீடு தேடி வரும்
நீங்கள் கடந்த காலத்தில் வெறித்தனமாக போட்ட உழைப்புக்கான பலன்களை அறுவடை செய்ய இது சிறந்த காலகட்டமாகும். உங்களுக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் அல்லது பணியாற்றும் நிறுவனத்தின் முக்கிய திட்டங்களில் இணையும் வாய்ப்பும் உங்களின் வீட்டின் கதவை தட்டும். தொழல் செய்பவர்களுக்கு பழைய தொடர்புகள், வாடிக்கையாளர்கள் மூலம் புதிய ஆதாயங்கள் தேடி வரும். நிதி சார்ந்த பெரிய முடிவுகளை சிந்தித்து மேற்கொள்ளவும்.
7/7
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.