கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் பிரதமர் மோடி முதல்முறையாக அரசு முறை பயணமாக இன்று (அக். 11) தமிழ்நாடு வந்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று காலை 10.50 மணியளவில் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ன் வழித்தடம் 4-ன் முதற்பகுதியான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவையை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (11.10.2026) தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை, சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். #CMJosephVijay
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 11, 2026
சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக போரூர் சென்றடைந்தார். அப்போது வழிநெடுக சாலை ஓரம் இருந்து பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி இடையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தை கொடியசைத்து திறந்துவைத்தார். அந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னை மெட்ரோ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மெட்ரோவை தொடங்கிவைத்து கொடியசைத்த போது பிரதமர் மோடி, விஜய்யின் கைகளையும் சேர்ந்து கொடியசைத்தார்.
Inauguration of the Poonamallee-Vadapalani stretch of Chennai Metro Phase-2 ensures: Faster, more convenient daily travel for commuters. Better connectivity between Chennai’s fast-growing western suburbs and the city centre. Unique 3.7-km double-decker corridor. Also travelled on the Metro and interacted with upcoming StartUps, whose energy was as usual exceptional. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் துவங்கப்பட்ட பூந்தமல்லி -வடபழனி வழித்தடம், பயணிகளின் தினசரி பயணத்தை எளிதாக்கியுள்ளதோடு விரைவுப்படுத்தியும் உள்ளது. இந்த வழித்தடம் அதிவேக வளர்ச்சி பெற்று வரும் சென்னையின் மேற்கு புறநகர் பகுதியோடு நகரின் மத்திய பகுதியை இணைக்க உதவுகிறது. 3.7 கி.மீ தொலைவிலான ஈரடுக்கு பாதை இவ்வழித்தடத்தின் சிறப்பம்சமாகும். வளர்ந்துவரும் புத்தொழில் நிறுவன பிரதிநிதிகளாடு மெட்ரோ ரயில் பயணத்தில் உரையாடினேன். அவர்களின் உற்சாகம் எப்போதும் போல அளவிடற்கரியதாய் இருந்தது.
— Narendra Modi (@narendramodi) October 11, 2026
அங்கிருந்து மொபைலில் யூபிஐ மூலம் டிக்கெட் எடுத்த பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் மற்றும் அதிகாரியுடன் மெட்ரோவில் பயணித்தார். பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் போரூர் முதல் பூந்தமல்லி வரை சென்று, அங்கிருந்து மீண்டும் போரூர் வந்தடைந்தனர். தொடர்ந்து போரூரில் இருந்து சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஐஐடிக்கு சென்றார்.
அப்போதும் சாலை ஓரம் நின்ற பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் விஜய் ஆகியோர் வழிபாடு மேற்கொண்டனர். அடுத்து, சென்னை ஐஐடியில் அமைந்துள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
மொத்தம் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். தமிழ்நாட்டில் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதேபோல், பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யின் கையை பிடித்து, சேர்ந்தே திட்டங்களை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், முதலமைச்சர் விஜய், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்கியது. இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர். அந்த வகையில், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
Works over Rs. 13,000 crore being launched in Chennai! https://t.co/76Uo9a3UaS
— Narendra Modi (@narendramodi) October 11, 2026