• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசியது மட்டுமின்றி தனது பிட்னஸையும் நிரூபித்திருக்கிறார் மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இதனால் அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.

Written BySudharsan G
Published: Oct 11, 2026, 05:13 PM IST|Updated: Oct 11, 2026, 05:38 PM IST
joinshare
நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?
Image Credit: Mohammed Shami | File Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

3

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

4

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

5

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Mohammed Shami, IND vs NZ: இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20ஐ தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று 3வது டி20ஐ போட்டி இந்தூர் நகரில் நடைபெற இருக்கிறது. அக். 17ஆம் தேதிவரை இத்தொடர் நடைபெறும்.

இதையடுத்து, இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அக். 22ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் தொடங்க இருக்கிறது.

மேலும் படிக்க | தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்கிய ரஞ்சி கோப்பை திருவிழா

இதையடுத்து, நவம்பர் 4ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரும், நவம்பர் 19ஆம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்திய டி20ஐ ஸ்குவாட் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஓடிஐ மற்றும் டெஸ்ட் ஸ்குவாட் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலில், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் உச்சத் தொடராக அறியப்படும் ரஞ்சி கோப்பை 2026-27 சீசனின் இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் பல வீரர்கள் தங்களின் சிறப்பான திறனை வெளிப்படுத்தி, இந்திய அணியின் கதவுகளை தட்டுவதற்கு முயற்சிப்பார்கள். அப்படியிருக்க, முதல் நாளான இன்றே முக்கிய வீரர் ஒருவர் மீண்டும் தனது திறனை நிரூபித்துக் காட்டி உள்ளார்.

Ranji Trophy have begun today and one of the performances worth mentioning surely will be an amazing bowling performance reading 17.3-9-30-4 from a seamer from Bengal to see delhi bowled out for 240. His name is Mohammad Shami.

— Prasanna (@prasannalara) October 11, 2026

முகமது ஷமியின் அசத்தலான பந்துவீச்சு

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியின் வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி 4 விக்கெட்டை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் 17.3 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே கொடுத்திருக்கிறார், எகானமி 1.71 ஆகும். அதிலும் 9 மெய்டன் ஓவர்கள் அடக்கம்.

அவரது முதல் 9 ஓவர்களில் 7 ஓவர்கள் மெய்டன். அதில் 1 விக்கெட்டை எடுத்திருந்தார், 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் புதிய பந்தில் தனது வித்தை தீரவில்லை என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளார். பந்து ரிவர்ஸ் ஆகும்போதும் அவரை அடித்துக்கொள்ள யாரும் கிடையாது.

சக பெங்கால் வேகப்பந்துவீச்சாளர்களான முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு இணையாக 17 ஓவர்களை வீசியிருப்பதன் மூலம் முகமது ஷமி தனது பிட்னஸையும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். இதன்மூலம் முகமது ஷமி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி மீண்டும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

ஷமி இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

புவனேஷ்வர் குமார் தற்போது பும்ரா இல்லாத டி20ஐ ஸ்குவாடுக்கு தேர்வாகியிருக்கும் நிலையில், ஷமிக்கும் ஓடிஐ ஸ்குவாடில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 உலகக் கோப்பை தொடருக்கு ஷமியை தயார் செய்ய இதுவே சரியான தருணம் ஆகும்.

கடந்த காலங்களில் தேர்வுக்குழு தலைவராக இருந்த அஜித் அகர்கர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோரை தேர்வு செய்யாத நிலையில், தற்போது தேர்வுக்குழுவும், அவர்களின் மனநிலையும் மாறியிருப்பதால் ஷமிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ தொடருக்கு இந்திய ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில் வேகப்பந்துவீச்சாளர்களாக சக பெங்கால் வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் பயணிக்க உள்ளனர்.

இவ்விருவருக்கும் டெஸ்ட் ஸ்குவாடில் இடம் கிடைக்கலாம், ஆனால் ஷமிக்கு வொயிட் பால் ஓடிஐ தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷமிக்கு பிட்னஸ் மட்டுமே பிரச்னையாக இருந்த நிலையில், அவரால் தொடர்ச்சியாக 4 ஓவர்கள் ஸ்பெல் வீச முடிகிறது என்பதால் அவரை எடுப்பதில் சிக்கல் இருக்காது.

மேலும் படிக்க | NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team