• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /24 நாட்கள் விடுமுறை! 2027-ல் எப்போதெல்லாம் லீவு? பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு

24 நாட்கள் விடுமுறை! 2027-ல் எப்போதெல்லாம் லீவு? பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு

Written ByUmabarkavi K
Published: Oct 22, 2026, 03:25 PM IST|Updated: Oct 22, 2026, 03:45 PM IST
joinshare
TN Public Holidays 2027: 2027ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், 2027ஆம் ஆண்டு எத்தனை அரசு விடுமுறை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

TN Public Holidays 2027:  2027ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் 8 நாட்கள் சனி, ஞாயிறு  வருகின்றன என  பட்டியலில் கூறப்பட்டுள்ளது. 
 

TN Public Holidays 20271/6

2027 அரசு விடுமுறை நாட்கள்

2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது (பல்வகைத் துறை) சார்பில் தலைமைச் செயலாளர் மு.சாய் குமார், அரசாணை வெளியிட்டுள்ளார். 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கும் பொது விடுமுறை நாட்கள் பொருந்தும்.
TN Public Holidays 20272/6

24 நாட்கள் அரசு விடுமுறை

மேலும் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்களாகும். இதனை தவிர, மொத்தமாக 2027ஆம் ஆண்டில் 24 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 நாட்கள் சனி, ஞாயிறுகளில் அரசு விடுமுறைகள் வருகிறது என தமிழக அரசு வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Public Holidays 20273/6

ஜனவரி முதல் டிசம்பர் வரை எத்தனை விடுமுறை நாட்கள்?

2027ஆம் ஆண்டில் ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1 வெள்ளிக்கிழமை, ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல், ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளூர் தினம், ஜனவரி 17ஆம் தேதி ஞாயிற்றுகிழமை உழவர் திருநாள், ஜனவரி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை தைப்பூசம், ஜனவரி 26ஆம் தேதி செவ்வாய்கிழமை குடியரசு தினம், மார்ச் 10ஆம் தேதி புதன்கிழமை ரம்ஜான், மார்ச் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி, ஏப்ரல் 1ஆம் தேதி வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக வங்கிகள்/கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Public Holidays 20274/6

கிருஷ்ண ஜெயந்தி, விஜயதசமி எப்போது?

மேலும், ஏப்ரல் 7ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு புதன்கிழமை, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு புதன்கிழமை, ஏப்ரல் 19ஆம் தேதி திங்கள்கிழமை மகாவீரர் ஜெயந்தி, மே 1ஆம் தேதி மே நாள் சனிக்கிழமை, மே 17ஆம் தேதி பக்ரீத் திங்கள்கிழமை, ஜென் 15அம் தேதி செவ்வாய்கிழமை மொகரம், ஆகஸ்ட் 15ஆம் தேதி ஞாயிற்றுகிழமை சுதந்திர தினம், ஆகஸ்ட் 25ஆம் தேதி புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்திக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Public Holidays 20275/6

தீபாவளி பண்டிகைக்கு எப்போது விடுமுறை?

செப்டம்பர் 4ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2ஆம் தேதி சனிக்கிழமை காந்தி ஜெயந்தி, அக்டோபர் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆயுதபூஜை, அக்டோபர் 9ஆம் தேதி சனிக்கிழமை விஜயதசமி, அக்டோபர் 28ஆம் தேதி வியாழன்கிழமை தீபாவளி, அக்டோபர் 25ஆம் தேதி கிருஸ்துமஸ் சனிக்கிழமை அன்று விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Public Holidays 20276/6

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நாட்கள் விடுமுறை

இதில் மேலும் திருவள்ளுவர் நாள் (ஜனவரி 16), உழவர் திருநாள் (ஜனவரி 17), மே நாள் (மே 1), சுதந்திர நாள் (ஆகஸ்ட் 15), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 4), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), விஜயதசமி (அக்டோபர் 9) மற்றும் கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) ஆகியவை வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
ஜெயிலர் 2 படத்துக்கு இலவச டிக்கெட்! ஆனா ஒரே ஒரு கண்டீஷன்..என்ன தெரியுமா?

ஜெயிலர் 2 படத்துக்கு இலவச டிக்கெட்! ஆனா ஒரே ஒரு கண்டீஷன்..என்ன தெரியுமா?

2

நிதிச் சந்தைகளில் AI புரட்சி: முதலீட்டின் எதிர்காலத்தை மாற்றும் செயற்கை நுண்ணறிவு

3

தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றம்: SOP-ஐ திருத்திய மத்திய அரசு

4

தம்மாம் விமான நிலையத்தில் திடீர் தாக்குதல்... இந்தியர் உயிரிழப்பு -என்ன நடந்தது?

5

ரூ.5000 மட்டும் எடுக்க அனுமதி... புதுச்சேரி கூட்டுறவு வங்கிக்கு RBI திடீர் கட்டுப்பாடு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.