ICC WTC Points Table : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிக்கு பிறகு, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலும், அதில் ஒவ்வொரு அணியின் புள்ளிகளையும் காணலாம்.
ICC World Test Championship Points Table 2025-27: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடர் என்பது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் சுழற்சி முறையிலான தொடராகும். 2019-2021 சீசனை நியூசிலாந்து அணியும், 2021-23 சீசனை ஆஸ்திரேலிய அணியும், 2023-25 சீசனை தென்னாப்பிரிக்க அணியும் வென்றன. இந்நிலையில், 2025-27 சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் புள்ளிப்பட்டியலை இங்கு காணலாம்.
1/5
இந்தியா
WTC 2025-27 சுழற்சியில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி இந்திய அணி 4 வெற்றி, 4 தோல்வி, 1 டிரா என 52 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிகள் சதவீதம் 48.15%. (இலங்கை - 41.67%, இங்கிலாந்து - 24.36%, பாகிஸ்தான் - 22.22%, மேற்கு இந்திய தீவுகள் - 20.83% என முறையே 6வது முதல் 9வது இடத்தில் உள்ளன)
2/5
வங்கதேசம்
WTC 2025-27 சுழற்சியில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி வங்கதேச அணி 3 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா என 40 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிகள் சதவீதம் 66.67%.
3/5
நியூசிலாந்து
WTC 2025-27 சுழற்சியில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நியூசிலாந்து அணி 4 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா என 52 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிகள் சதவீதம் 72.22%.
4/5
தென்னாப்பிரிக்கா
WTC 2025-27 சுழற்சியில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி 3 வெற்றி, 1 தோல்வி என 36 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிகள் சதவீதம் 75%.
5/5
ஆஸ்திரேலியா
WTC 2025-27 சுழற்சியில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலிய அணி 7 வெற்றி, 2 தோல்வி என 84 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிகள் சதவீதம் 77.78%.