• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இந்திய அணியில் இந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பு... 4 ஓடிஐ பிளேயிங் 11ல் பெரிய மாற்றம்

இந்திய அணியில் இந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பு... 4 ஓடிஐ பிளேயிங் 11ல் பெரிய மாற்றம்

Written BySudharsan G
Published: Nov 12, 2026, 11:11 PM IST|Updated: Nov 12, 2026, 11:15 PM IST
joinshare
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஓடிஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. கேப்டன் சுப்மான் கில் இல்லாத இந்திய அணியை ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்த உள்ளார். இந்திய அணியின் பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.

நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுய் நகரில் நடைபெற இருக்கும் 4வது ஓடிஐ போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நாளை (நவ. 13) காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் தொலைக்காட்சி சேனல்களிலும், Sony Liv ஓடிடி தளத்திலும் நேரலையில் காணலாம்.

India vs New Zealand ODI1/5

முன்னிலையில் இந்திய அணி

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஓடிஐ தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது ஓடிஐ போட்டி மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
India vs New Zealand ODI2/5

பாக்கியிருக்கும் 2 ஓடிஐ

4வது ஓடிஐ போட்டி நாளை (நவ.13) மவுண்ட் மவுங்கானுய் நகரில் நாளை நடைபெற இருக்கிறது. வரும் நவ. 15ஆம் தேதி 5வது ஓடிஐ போட்டி நடைபெற இருக்கிறது. ஓடிஐ தொடரை தொடர்ந்து வரும் நவ. 19ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.
India vs New Zealand ODI3/5

டெஸ்ட் அணியுடன் 3 ஓடிஐ வீரர்கள்

டெஸ்ட் தொடருக்கு தயாராகும் பொருட்டு சுப்மான் கில், கேஎல் ராகுல், அன்சுல் கம்போஜ் ஆகியோர் கடைசி இரண்டு ஓடிஐ போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. இவர் முதல் மூன்று ஓடிஐ போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்ததால், நிச்சயம் நாளைய போட்டியில் பிளேயிங் லெவன் மாற்றம் செய்யப்படும்.
India vs New Zealand ODI4/5

ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?

கேப்டனாக கில்லுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார். ரோஹித் சர்மா உடன் இஷான் கிஷன் ஓபனராக களமிறங்குவார், அவர் கேஎல் ராகுலுக்கு பதில் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார். இதனால், மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்சுல் கம்போஜிற்கு பதில் சிராஜ் களமிறக்கப்படலாம்.
India vs New Zealand ODI5/5

இந்திய அணியின் பிளேயிங் 11 கணிப்பு

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அக்சர் பட்டேல், ருதுராஜ் கெய்க்வாட், நமன் திர், ஆகிப் நபி, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரர், முகமது சிராஜ்.
TAGS:
Indian Cricket Team

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

2

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

3

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

4

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

5

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.