IRCTC kashmir Tour: ஐஆர்சிடிசி சென்னையில் இருந்து காஷ்மீருக்கு குறைந்த விலையில் சுற்றுலா அழைத்து செல்கிறது. இதற்கு எப்படி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
IRCTC kashmir Tour: சென்னையில் இருந்து காஷ்மீருக்கு விமானம் மூலம் புறப்பட்டு, அங்கு சோனாமார்க், குல்மார்க், பஹல்காம், ஸ்ரீநகர் படகு வீடு உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவீர்கள்.
1/5
காஷ்மீர் சுற்றுலா
மேலும், 5 நாட்களுக்கான மதிய உணவை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐஆர்சிடிசி தொகுப்பில் மதிய உணவு இடம்பெறவில்லை. மேலும், அனைத்து சுற்றுலா இடங்களுக்கான நுழைவு கட்டணத்தையும் நீங்கள் தான் செலுத்த வேண்டும். எனவே, சென்னையில் இருந்து காஷ்மீர் சுற்றுலா செல்ல விருப்பப்படுவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
2/5
காஷ்மீர் சுற்றுலா
இந்த சுற்றுலா தொகுப்பில் விமான டிக்கெட், தங்கும் வசதி, அனைத்து சுற்றுலா இடங்களை பார்வையிட உள்ளூர் போக்குவரத்து, 5 வேளை காலை உணவு, 5 வேளை இரவு உணவு இடம்பெற்றுள்ளது. மேலும், ஜிஎஸ்டி, டிராவல் இன்சூரன்ஸ் இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
3/5
காஷ்மீர் சுற்றுலா
சென்னையில் காஷ்மீர் சுற்றுலா தொகுப்பின் கட்டணத்தை பொறுத்தவரை, ஒரு நபருக்கு ரூ.43,600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பேருக்கு ரூ.38,400, மூன்று பேருக்கு ரூ.37,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 11 வயதுடைய குழந்தைக்கு படுக்கையுடன் ரூ.30,200, படுக்கை இல்லாத குழந்தைகள் ரூ.28,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4/5
காஷ்மீர் சுற்றுலா
சென்னையில் இருந்து விமானத்திற்கு புறப்பட்டு, மறுநாள் ஸ்ரீநகரில் தரையிறங்குவீர்கள். அங்கிருந்து சோனாமார்க், குல்மார்க், பஹல்காம், ஸ்ரீநகர் படகு வீடு உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவீர்கள். இந்த இடங்களில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களை பார்வையிடுவீர்கள். காஷ்மீரில் சுற்றுலா இடங்களுக்கு உள்ளூர் போக்குவரத்து மூலம் ஐஆர்சிடிசி அழைத்து செல்லும்.
5/5
காஷ்மீர் சுற்றுலா
ஐஆர்சிடிசி பல்வேறு மாநிலங்களுக்கு சென்னையில் இருந்து சுற்றுலா அழைத்து செல்கிறது. அந்த வகையில், காஷ்மீருக்கு ஐஆர்சிடிசி சென்னையில் இருந்து சுற்றுலா அழைத்து செல்கிறது. இந்த சுற்றுலா தொகுப்பு 5 இரவுகள், 6 நாட்களை உள்ளடக்கியது. சென்னையில் இருந்து காஷ்மீர் சுற்றுலா செப்டம்பர் 11ஆம் தேதி துவங்குகிறது. சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மீண்டும் சென்னைக்கு செப்டம்பர் 16ஆம் தேதி வரை திரும்புவீர்கள்.