PNR Rule Change: இந்திய ரயில்வே நீண்ட காலமாக பழக்கத்தில் உள்ள பழைய டிக்கெட் முன்பதிவு முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. Migrated PNR (மாற்றப்பட்ட PNR) என்ற புதிய முறை, 2026 டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களிலும் முழுமையாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்திய ரயில்வேயில் மாற்று எரிபொருள் பயன்பாட்டில் புதிய முயற்சி தொடங்கியுள்ளது. நாட்டின் முதல் திரவ எரிவாயுவில் இயங்கும் LNG–டீசல் இரட்டை எரிபொருள் ரயில் குஜராத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹைட்ரஜன் ரயில் அறிமுகமான நிலையில், இந்த இரண்டு ரயில்களும் எப்படி வேறுபடுகின்றன?
குஜராத்தின் சமர்மதியில் இந்தியாவின் முதல் LNG ரயிலைக் கொடியசைத்து தொடங்கிவைத்த அமித்ஷா. இதன் சிறப்பம்சங்கள் என்ன...? அவர் தொடங்கிவைத்த மற்ற திட்டங்கள் குறித்தும் இங்கு காணலாம்.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட வட பழனி - பூந்தமல்லி இடையேயான பணிகள் முடிவடைந்து 6 மாதங்களாக திறப்புக்காக காத்திருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பயணிகள் ரயில்களின் வேகத்தையும், பயண வசதியையும் அதிகரிக்கும் வகையில், புதிய தலைமுறை என்ஜின்களை கொள்முதல் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நீண்ட தூர இரவு நேரப் பயணத்தை இன்னும் வசதியாகவும், வேகமாகவும் மாற்றும் வகையில், இந்திய ரயில்வே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டு வருகிறது.
Diwali Train Ticket Booking 2026 : இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது.
இந்தியாவில் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ரயில் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
குற்றாலத்திற்கும், செங்கோட்டைக்கும் பயணிக்கும் பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை நான்கு ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் ஏற்படும் இணையதள முடக்கம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை குறைக்க, IRCTC தனது டிக்கெட் புக்கிங் சிஸ்டத்தை மேம்படுத்த உள்ளது. தற்போது முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களில் சுமார் 89 சதவீதம் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை 65 கோடியே 8 லட்சம் முன்பதிவு டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 57 கோடியே 90 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. Tatkal முன்பதிவு நேரங்களில், ஒரே நேரத்தில் அதிகளவில் பயணிகள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Next Generation e-Ticketing எனப்படும் NGET அமைப்பை IRCTC மேம்படுத்துகிறது. இதற்காக சர்வர், சேமிப்பு வசதி, நெட்வொர்க் மற்றும் மென்பொருள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. தற்போது நிமிடத்திற்கு 37 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும் நிலையில், இதனை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு சர்வரில் கோளாறு ஏற்பட்டாலும் மற்றொரு சர்வர் மூலம் சேவை தொடர்ந்து செயல்படும் வகையில் Active மற்றும் Active Disaster Recovery வசதியும் கொண்டுவரப்பட உள்ளது. ஜூலை 15-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Beta இணையதளத்தில், குறைவான CAPTCHA, குறைந்த Pop-up, அனைத்து வகுப்புகளுக்குமான Seat Availability, எளிமையான Checkout உள்ளிட்ட வசதிகள் அறிமுகமாகியுள்ளன. அங்கீகரிக்கப்படாத ஏஜெண்டுகள் மற்றும் Bot பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் IRCTC நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், Tatkal மற்றும் Advance Reservation நேரங்களில் டிக்கெட் புக்கிங் மேலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில்களின் நேரங்களின் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது தெற்கு ரயில்வே. இது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
கோவை ரயில் நிலையம் புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இந்திய ரயில்வே பக்கா பிளானை போட்டுள்ளது.
IRCTC Kashi Tour Package: ஐஆர்சிடிசி குறைந்த செலவில் காசிக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது. கயா, வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கு திருநெல்வேலியில் இருந்து சுற்றுலா அழைத்து செல்கிறது. இதற்கு எப்படி டிக்கெட் புக் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Indian Railway Rules: ரயில்களில பயணிகளுக்கு சில பொருட்களை எடுத்து செல்ல இந்தியன் ரயில்வே முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. அதனை மீறி பயணிகள் எடுத்து சென்றால் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். அது என்னென்ன பொருட்கள் என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.
IRCTC kashmir Tour: ஐஆர்சிடிசி சென்னையில் இருந்து காஷ்மீருக்கு குறைந்த விலையில் சுற்றுலா அழைத்து செல்கிறது. இதற்கு எப்படி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.