தற்போது வெளியாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஜெயிலர் 2 திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து இந்த படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
KH X RK திரைப்படம்
நெல்சன் திலீப்குமார், நடிகர்கள் ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் வைத்து KH X RK எனும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்ததாக ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2/5
ஜூனியர் என்.டி.ஆர் படம்
ஜூனியர் என்.டி.ஆரை வைத்து, நெல்சன் திலீப்குமார் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம்.
3/5
சூர்யா நெல்சன் படம்
சூர்யா, தான் நடித்த இரண்டு படங்கள் மூலமாகவும் Backtoback ஹிட் கொடுத்து வருகிறார். தற்போது ஜீத்து மாதவன் இயக்கத்தில் சீன் எனும் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தையடுத்து அவர் நெல்சனுடன் கைக்கோர்த்தால் அது அவருடைய 50வது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4/5
தனுஷ்-நெல்சன் படம்
தனுஷிடமும் நெல்சன் ஒரு கதையை சொன்னதாகவும், அது தனுஷிற்கு பிடித்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இது இன்னும் பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கிறது.
5/5
ஜெயிலர் 3
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாகங்களும் வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, இதன் மூன்றாவது பாகமும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.