• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஜெயிலர் 2 : மோகன் லால் காட்சிகளை தேவையில்லாமல் கட்! காஸ்டியூம் டிசைனர் புலம்பல்..

ஜெயிலர் 2 : மோகன் லால் காட்சிகளை தேவையில்லாமல் கட்! காஸ்டியூம் டிசைனர் புலம்பல்..

Written ByYuvashree M
Published: Oct 15, 2026, 05:46 PM IST|Updated: Oct 15, 2026, 06:07 PM IST
joinshare
Jailer 2 : ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி, எட்டுத்திக்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது; இதையடுத்து, அந்த படத்தில் மோகன் லாலின் காட்சிகளை தேவையில்லாமல் கட் செய்திருப்பதாக கூறியிருக்கின்றார்.

Jailer 2 : “மோகன் லால் போன்ற பெரிய சூப்பர் ஸ்டார்களுக்குரிய காட்சிகளை எடுத்து விட்டு அதை தேவையில்லாமல் நீக்கியிருக்கின்றனர்” என்று ஜெயிலர் 2 படக்குழு மீது அப்படத்தின் காஸ்டியூம் டிசைனர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Jailer 2 Movie Success1/5

ஜெயிலர் 2 படம் வெற்றி

ஜெயிலர் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினியின் நடிப்பு, நெல்சனின் இயக்கம் என அனைத்தும் பாராட்டப்பட்டாலும், படத்தில் மோகன் லாலுக்கு காஸ்டியூம் டிசைனராக இருந்த ஒருவர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இது குறித்த தகவலைத்தான் இங்கு காணப்போகிறோம்.
Jailer 2 Mohan Lal Character2/5

ஜெயிலர் 2 மோகன்லால் கதாப்பாத்திரம்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் மேத்யூ எனும் கதாப்பாத்திரத்தில் மோகன் லால் நடித்திருக்கிறார். அவருக்கு காஸ்டியூம் டிசைனராக ஜிஷாத் ஷம்ஷுதின் வேலை பார்த்திருக்கிறார். படத்தை பார்த்த அவர், மோகன்லால் போன்ற பெரிய ஸ்டார்களின் காட்சிகள் ரொம்பவே நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Jailer 2 cut down 3/5

ஜெயிலர் 2 காட்சிகள் குறைப்பு குற்றச்சாட்டு

இது குறித்து ஜிஷாத் வெளியிட்டிருக்கும் பதிவில் “'ஜெயிலர் 2' வெளியீட்டை முன்னிட்டு, ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நாங்கள் படமாக்கிய காட்சிகளின் அடிப்படையில், எங்கள் உழைப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது—டிரெய்லரில் வெறும் 2 வினாடி காட்சியாக அது சுருக்கப்பட்டிருந்தபோது கூட, நான் நம்பிக்கையுடன்தான் இருந்தேன். ஆனால், படம் வெளியானபோது, ​​மோகன்லால் சார் நடித்த மூன்று வெவ்வேறு தோற்றங்கள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன; டிரெய்லரில் இடம்பெற்ற அந்த ஒரு காட்சியும் கூட நீக்கப்பட்டுவிட்டது. திரைத்துறையில் எனக்கு இருக்கும் அனுபவத்தின்படி, மோகன்லால் சார் போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரின் காட்சிகளை நீக்குவது என்பது முற்றிலும் தேவையற்ற ஒன்று” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Costume Designer Post4/5

காஸ்டியூம் டிசைனரின் பதிவு

மேலும், “நமது சூப்பர் ஸ்டாரின் பங்களிப்பு இவ்வளவு தூரம் குறைக்கப்படுவதைக் கண்டு, ஒருவேளை இதன் அடுத்த பாகம் (Sequel) உருவானால், அதில் நான் பங்கேற்கப் போவதில்லை. என் மீது நம்பிக்கை வைத்த அனைவரிடமும் நான் மனதார வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குச் சலுகைகளோ, லாபமோ, 'கோடி கிளப்' சாதனைகளோ அல்லது நட்சத்திர அந்தஸ்தோ முக்கியமல்ல. நான் என்றும் ரசிகர்களுக்காகவும், கலை நேசிப்பாளர்களுக்காகவும், மோகன்லால் சாருக்காகவும் மட்டுமே நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Post going viral5/5

ஜெயிலர் 2 குறித்த பதிவு வைரல்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் மோகன்லாலின் காட்சிகள் நிறைய நீக்கப்பட்டிருப்பது குறித்து ஷம்ஷுதின் வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

2

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்... சூர்யவன்ஷி ஏன் விளையாடவில்லை - கேப்டன் சொன்ன காரணம்

3

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

4

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

5

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.