• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /எக்ஸ்ட்ரா காட்சிகளுடன் ஓடிடிக்கு வரும் ஜெயிலர் 2! எப்போது, எந்த தளத்தில் ரிலீஸ்? விவரம் இங்கே..

எக்ஸ்ட்ரா காட்சிகளுடன் ஓடிடிக்கு வரும் ஜெயிலர் 2! எப்போது, எந்த தளத்தில் ரிலீஸ்? விவரம் இங்கே..

Written ByYuvashree M
Published: Nov 04, 2026, 09:42 AM IST|Updated: Nov 04, 2026, 10:04 AM IST
joinshare
Jailer 2 OTT : ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆன படம், ஜெயிலர் 2. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Jailer 2 OTT : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் ‘முத்துவேல் பாண்டியன்’ஆக கலக்கியிருந்த திரைப்படம், ஜெயிலர் 2. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 3 வாரங்களை எட்டப்போகும் நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. இது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Rajinikanth as Muthuvel Pandian In Jailer 21/5

ஜெயிலர் 2வில் முத்துவேல் பாண்டியனாக ரஜினி

ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி, கிட்டத்தட்ட 20 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் இப்படம் இப்போதும் பல்வேறு தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாக போய்க்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் ‘முத்துவேல் பாண்டியன்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் குறித்தும், அதன் ஓடிடி ரிலீஸ் குறித்தும் இங்கு விரிவாக காண்போம்.
Rajinikanth Becomes Aurakanth in Jailer 22/5

Aurakanth ஆக மாறிய ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரசிகர்களை மகிழ்விக்கும் காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் இருந்தது. அதைத்தாண்டி, ரஜினிகாந்த் ‘Aurakanth' ஆக மாறிய பல ஸ்லோ மோஷன் காட்சிகள் அவருடைய ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தன. இதனாலேயே ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர்கள் பலர் ‘தலைவர் தரிசனம் பார்க்கணும்’ எனும் பெயரில் ஜெயிலர் 2 படத்தை 5-6 முறை கூட தியேட்டரில் பார்க்கின்றனர். குடும்பங்களுக்கு படம் பிடித்து விட்டதால், இதற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸும் இருக்கின்றனர்.
Jailer 2 Box Office Collection Industry Hit3/5

ஜெயிலர் 2 வசூல் சாதனை

ஜெயிலர் 2 திரைப்படம், தற்போது வரை சுமார் ரூ.820+ கோடி வசூலித்து இண்டஸ்ட்ரி மெகா ஹிட் அடித்துள்ளது. இதுவரை, தமிழ் சினிமாவில் வெளியான படங்களிலேயே இதுதான் அதிக வசூல் பெற்ற படம் எனும் பெருமையை ஜெயிலர் 2 பெற்றிருக்கிறது. மேலும், படையப்பா, எந்திரன் பட வரிசையில், ஜெயிலர் 2 படத்திற்கும் இப்பெருமையை தேடி தந்திருக்கிறார் ரஜினிகாந்த்.
Jailer 2 OTT Release4/5

ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன போதே இது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகப்போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் இன்னும் எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை. தற்போது அது குறித்த அப்டேட்டும் வந்திருக்கிறது.
Jailer 2 OTT Release With Extra Scenes5/5

ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் எக்ஸ்ட்ரா காட்சிகள்

ஜெயிலர் 2 திரைப்படம், அமேசான் ப்ரைம் தளத்தில் நவம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதிமுறைப்படி, அந்த தேதியுடன் 4 வார Theatrical Run முடிவதால், அந்த தேதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, இப்படத்தில் இருக்கும் எக்ஸ்ட்ரா காட்சிகள் சேர்க்கப்பட்டு ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போகிறது.
TAGS:
OTT Release

Trending

  • News
  • Photos
  • Videos
சிறு வணிகங்களுக்கு RBI பரிசு: சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான FOREX விதிகளில் தளர்வு

சிறு வணிகங்களுக்கு RBI பரிசு: சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான FOREX விதிகளில் தளர்வு

2

வீடின்றி தவிக்கும் ‘கோஸ்ட் ரைடர்’ புகழ் நடிகர் நிக்கோலஸ்! என்ன ஆச்சு? இதோ முழு விவரம்..

3

Explainer: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலை என்ன?

4

அமெரிக்கா இடைக்காலத் தேர்தல்: டிரம்புக்கு ஷாக் கொடுத்த ஜனநாயக கட்சி.. கைமாறும் செனட் சபை.. ஏன் முக்கியம்?

5

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலை.. மாதம் ரூ.62,000 சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.