• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சூர்யாவை விட 3 மடங்கு அதிக சம்பளம் எனக்கு!" - நடிகை ஜோதிகா சொன்ன ரகசியம்

சூர்யாவை விட 3 மடங்கு அதிக சம்பளம் எனக்கு!" - நடிகை ஜோதிகா சொன்ன ரகசியம்

Written ByKarthikeyan Sekar
Published: Aug 09, 2026, 10:57 AM IST|Updated: Aug 09, 2026, 11:11 AM IST
joinshare
Jyothika : சூர்யாவை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் நடிகை ஜோதிகா.

Jyothika : சூர்யாவுடான திரைப்பயணம் மற்றும் சம்பளம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பேட்டி ஒன்றில் நடிகை ஜோதிகா வெளிப்படையாக பேசியுள்ளார்.
 

Jyothika Latest News1/6

ஜோதிகா பேட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா, திரைத்துறைக்கு அப்பாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jyothika Latest News2/6

ஜோதிகா ஓபன் டாக்

2003-ல் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அக்காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா தான், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க சூர்யாவைப் பரிந்துரைத்தார். இத்திரைப்படம் சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தந்தது.
Jyothika Latest News3/6

அதிக சம்பளம்

சமீபத்திய பேட்டியில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்துப் பேசிய ஜோதிகா, "என்னுடைய திரைப்பயணத்தின் தொடக்கத்தில், சூர்யாவை விட நான் 3 மடங்கு அதிக சம்பளம் வாங்கினேன்.
Jyothika Latest News4/6

30 மடங்கு குறைவு

ஆனால், இப்போது நான் வாங்கும் சம்பளம் அதைவிட 30 மடங்கு குறைவு" எனச் சிரித்தபடியே கூறினார். ஜோதிகாவின் இந்த இயல்பான பதிலைக் கேட்டு அருகிலிருந்த சூர்யாவும் புன்னகைத்தார்.
Jyothika Latest News5/6

சூர்யா சிறந்தவர்

தொடர்ந்து சூர்யா குறித்துப் பேசிய அவர், "ஒரு மனிதராகவும், நடிகராகவும், கணவராகவும் சூர்யா சிறந்தவர். சமத்துவம் என்பது அவருடைய இயல்பிலேயே உள்ளது.
Jyothika Latest News6/6

இணைந்து தான் முடிவெடுப்போம்

வீட்டில் சமையல் செய்வதில் தொடங்கி, குழந்தைகளை வளர்ப்பது, சுற்றுலா திட்டமிடுவது மற்றும் சினிமா முடிவுகள் வரை அனைத்தையும் நாங்கள் இருவருமே இணைந்து தான் முடிவெடுப்போம். ஒருவர் மற்றவரின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சியடைவதே எங்கள் உறவின் பலம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.