Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டத்தினருக்கு பிரதமர் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம். மாதம் ரூ.12,300 வரை உதவித்தொகையுடன் பயிற்சி. முழு விவரம்
Kanyakumari : பி.எம் தேசிய அப்ரண்டிஸ்ஷிப் மேளா குறித்த அறிவிப்பை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 8, 10, 12, பட்டதாரிகள் வரை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
1/7
பிரதமர் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
பிரதமர் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இயக்ககம் இணைந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 'பிரதம அமைச்சரின் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்' (Pradhan Mantri National Apprenticeship Mela) நடத்துகிறது.
2/7
முகாம் நடைபெறும் நாள்
முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் : இம்முகாம் வரும் 2026 செப்டம்பர் 23 அன்று காலை 9.00 மணி முதல் நாகர்கோவில், கோணத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (Govt. ITI) நடைபெற உள்ளது.
3/7
யார் யார் இதில் பங்கேற்கலாம்?
யார் யார் இதில் பங்கேற்கலாம்? : ஐ.டி.ஐ (ITI) தேர்ச்சி பெற்று இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். மேலும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டயம் (Diploma) மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இத்திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராகச் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
4/7
உதவித்தொகை விவரம்
மாதந்தோறும் உதவித்தொகை விவரம் : பயிற்சியில் இணையும் நபர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். ஓர் ஆண்டு தொழிற்பிரிவுக்குக் குறைந்தபட்சம் ரூ.6,800-ம், இரண்டு ஆண்டுகள் தொழிற்பிரிவுக்கு ரூ.12,300-ம் ஸ்டைபண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5/7
தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்
தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் : பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் 'தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்' (National Apprenticeship Certificate) வழங்கப்படும். இது எதிர்காலத்தில் முன்னணி நிறுவனங்களில் சிறந்த வேலைவாய்ப்பைப் பெற வழிவகுக்கும்.
6/7
தொழில் நிறுவனங்களுக்கான நன்மைகள்
தொழில் நிறுவனங்களுக்கான நன்மைகள் : 30 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் இதில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்; 4 முதல் 29 தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் விருப்பத்தின் பேரில் இணையலாம். நிறுவனங்களுக்குத் தேவையான திறன் வாய்ந்த மனிதவளம் கிடைப்பதுடன், பயிற்சி அளிக்கும் ஒரு நபருக்கு மாத ஊக்கத்தொகையில் 25% அல்லது அதிகபட்சம் ₹1,500 வரை ஒன்றிய அரசால் நிறுவனங்களுக்கு மீள வழங்கப்படும்.
7/7
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை : இம்முகாமில் பங்கேற்க விரும்பும் ஐ.டி.ஐ பயிற்சியாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தொழில் நிறுவனங்கள் [https://www.apprenticeshipindia.gov.in/login](https://www.apprenticeshipindia.gov.in/login) என்ற இணையதள முகவரியில் உடனடியாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.