குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லங்களுக்கு தமிழ்நாடு அரசு மானிய உதவித் தொகையை வழங்கி வருகிறது. இத்திட்டம் குறித்தும், இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்தும் இங்கு விவரமாக காணலாம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்து அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை விரிவாக இங்கு காணலாம்.
1/5
திட்டத்தின் நோக்கம்
ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு தரமான உணவு, பாதுகாப்பான உறைவிடம், உடை, சுகாதாரம் மற்றும் உரிய மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் தடையின்ற கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் குழந்தைகள் நல இல்லங்களுக்கு மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது.
2/5
தகுதி வரம்பு
இத்திட்டம் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லங்களுக்கு மட்டுமே ஆகும். அதேநேரத்தில், இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-இன் கீழ் பதிவு பெற்ற இல்லங்களுக்கு மட்டுமே இந்த மானிய உதவி வழங்கப்படுகிறது.
3/5
மானியத் தொகை எவ்வளவு?
தகுதியுள்ள குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லங்களுக்கு வழங்கப்படும் மொத்த மானியத் தொகை ரூ.4 லட்சம் ஆகும்.
4/5
விண்ணப்பிக்கும் இடம்
இந்த திட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் மானிய உதவி பெற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரவில் விண்ணப்பிக்கலாம்.
5/5
விண்ணப்பிக்க கடைசி நாள்
குறிப்பாக, இந்த இல்லங்கள் உதவித்தொகையை பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 17. மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரஙகளுக்கு www.madurai.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.