Madurai Corporation: மதுரை மாநகராட்சியில் குடிநீர் முதல் பாதாளச் சாக்கடை வரை பல்வேறு குறைகள் பொதுமக்களிடம் இருக்கலாம். அவற்றுக்கு தீர்வளிக்கும் வகையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமை மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் குறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
மதுரையில் கிழக்கு (மண்டலம் 1), வடக்கு (மண்டலம் 2), மத்திய (மண்டலம் 3), தெற்கு (மண்டலம் 4), மேற்கு (மண்டலம் 5) ஆகிய 5 மண்டலங்கள் உள்ளன. மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. தற்போது நடத்தப்பட உள்ள இந்த பொதுமக்கள் குறைதீர் முகாம் மதுரை முதல் மண்டலத்தில் (கிழக்கு) நடத்தப்படுகிறது.
1/5
மதுரையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மதுரை மக்களின் குறைகளை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும் விதமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
2/5
என்னென்ன குறைகளை போக்கலாம்?
மதுரை மாநகராட்சியின் குறைதீர்க்கும் முகாமில் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர், புதிய சொத்து வரி விதிப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், கட்டிட வரைபட அனுமதி, தொழில்வரி, தெருவிளக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/5
எங்கு, எப்போது குறைதீர் முகாம்?
அந்த வகையில், வரும் அக்டோபர் 13ஆம் தேதி (செவ்வாய்) சர்வேயர் காலனி, மதுரை மாநகராட்சி மண்டலம் - 1 (கிழக்கு) அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் மதுரை மேயர் (பொறுப்பு) நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
4/5
எந்தெந்த வார்டு மக்கள் பங்கேற்கலாம்?
மதுரை மாநகராட்சியின் 3வது வார்டு முதல் 19வது வார்டு வரை என முறையே ஆனையூர், பார்க்டவுண், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூர்து நகர், ஆத்திக்குளம், கோ. புதூர், வள்ளுவர் காலனி, எஸ். ஆலங்குளம், அலமேலு நகர், கூடல் நகர் ஆகியவை மண்டலம் - 1 (கிழக்கு) பகுதிக்கு உள்பட்ட வார்டு பகுதிகளாகும். இப்பகுதி மக்கள் இந்த குறைதீர் முகாமில் பங்கேற்கலாம்.
5/5
எந்தெந்த வார்டு மக்கள் பங்கேற்கலாம்?
அதேபோல், மதுரை மாநகராட்சியின் 36வது வார்டு முதல் 40வது வார்டு வரை முறையே மேலமடை, பாண்டி கோவில், சௌராஷ்ட்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளும் மாநகராட்சியின் மண்டலம் 1 பகுதியாகும். எனவே, இப்பகுதி மக்களும் இந்த முகாமில் பங்கெடுத்து தங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மனுக்கள் அளிக்கலாம்.