மதுரையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மதுரையில் எங்கு வகுப்புகள் நடத்தப்படும்?, வகுப்புகளில் இணைவது எப்படி? என்பதை இங்கு காணலாம்.
மதுரையில் போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு மட்டுமின்றி பல்வேறு போட்டித் தேர்வுக்கும் இங்கு பயிற்சி பெறலாம். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள இங்கு காணலாம்.
1/5
மதுரையில் இலவச பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறையின் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
2/5
குரூப்-4 தேர்வுக்கு பயிற்சி
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அன்று TNPSC குரூப்-4-ல் 6,574 காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, குரூப் 4 தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மதுரை கே. புதூர் அலுவலகத்தில் நேற்று (அக். 21) தொடங்கிவைக்கப்பட்டது.
3/5
ஆர்வமுடைய மாணவர்கள் என்ன செய்யணும்?
இந்த கட்டணமில்ல பயிற்சி வகுப்பில் சேர்ந்த பயிற்சி பெற விரும்புவோர் போட்டித் தேர்வு ஆர்வலர்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சியில் சேரலாம் என தெரிவிக்கப்படடுள்ளது.
4/5
பதிவு செய்வது எப்படி?
அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் நபர்கள், தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த தேர்விற்கு தேவையான பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை pdf வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
5/5
கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு பெண்
TN Career Services Employment என்ற யூ-ட்யூப் சேனலில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் காணொளி காட்சிகளாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர்புக்கு 9499055918 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.