மதுரை மாவட்டத்தில் வேலை தேடும் மாணவர்கள், இளைஞர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் உரிய ஆவணங்கள், சான்றிதழ்களுடன் வந்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தனியார் துறை சார்ந்த எக்கச்சக்க நிறுவனங்கள் இந்த முகாமுக்கு வருகை தருவார்கள்.
1/5
வேலைவாய்ப்பு முகாம் எங்கு, எப்போது?
மதுரை மதுரா கல்லூரியில் வரும் சனிக்கிழமை (நவ. 28) அன்று காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2/5
பணியமர்த்தும் ஆணைகள் வழங்கப்படும்
மதுரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமியில் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலை தேடுபவர்களை தேர்வு செய்து பணியமர்த்தும் ஆணைகளை வழங்க உள்ளன.
3/5
யார் யார் கலந்துகொள்ளலாம்?
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ, நர்சிங், டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்த வேலை தேடுபவர்கள் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/5
வேலை தேடுபவர்கள் பதிவு செய்வது எப்படி?
வேலை தேடுபவர்கள் தங்கள், இந்த முகாமுக்கு வரும்போது தங்களின் பயோ டேட்டா, கல்விச் சான்றிதழ்களின் நகல், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வர வேம்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை தேடுபவர்கள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தங்களது விவரங்களை http://www.tnprivatejob.tn.gov.in என்ற தளத்தில் பதிவுசெய்யலாம்.
5/5
முற்றிலும் இலவசம்
வேலைவாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால், தங்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் இது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055918 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.