• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /டிசம்பரில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. தொழில், பணவரவில் அமோக வளர்ச்சி!

டிசம்பரில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. தொழில், பணவரவில் அமோக வளர்ச்சி!

டிசம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சி, சனி வக்ர நிவர்த்தி மற்றும் குரு வக்ர பெயர்ச்சி போன்ற முக்கிய கிரக மாற்றங்களால் 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும்.

Written ByR Balaji
Published: Nov 26, 2026, 18:18 IST|Updated: Nov 26, 2026, 18:23 IST
joinshare
டிசம்பரில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. தொழில், பணவரவில் அமோக வளர்ச்சி!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பரில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. தொழில், பணவரவில் அமோக வளர்ச்சி!

டிசம்பரில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. தொழில், பணவரவில் அமோக வளர்ச்சி!

2

வேலை தேடுபவரா? சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

3

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

4

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

5

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2026 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாடக்ளே உள்ளன. விரைவில் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் பிறக்க உள்ளது. இந்த மாதம் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெற இருப்பதால் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக டிசம்பர் மாத தொடக்கத்தில் ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்கள் தங்களது ராசி மாற்றத்தை மேற்கொள்ள உள்ளன. இதனைத் தொடர்ந்து சனி பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் சிம்ம ராசியில் வக்ர நிலையில் தனது பயணத்தை தொடங்குகிறார். மேலும், சூரிய பகவானும் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்யவுள்ளார்.

அடுத்தடுத்து நிகழவிருக்கும் இந்த கிர்க மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, சில ராசிகளை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பலன்களை பெறக்கூடும். அந்த வகையில், டிசம்பர் மாதத்தில் தொழில் மற்றும் பணவரவில் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கன்னி (Virgo Zodiac Signs)

கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் பல சாதகமான மாற்றங்களை கொண்டு வரக்கூடும். குறிப்பாக, பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த முன்னேற்றம் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். இதுவரை பல்வேறு காரணங்களால் தாமதாமாகி வந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். உங்களின் தொடர் முயர்சிகளுக்கும் உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைப்பதால் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடும். மேலும், சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் அமைய வாய்ப்புள்ளது.

துலாம் (Libra Zodiac Signs)

துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் நிறைந்ததாக இருக்கக்கூடும். குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்ளும் சூழலும் அமையும். வீட்டில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதியான சூழல் உருவாகக்கூடும். குடும்ப உறுப்பினர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், நீண்ட காலமாக மனதில் வைத்திருந்த ஆசைகள் சில நிறைவேறுவதற்கான சாதகமான சூழலும் இந்த மாதத்தில் அமையலாம்.

மகரம் (Capricorn Zodiac Signs)

மகர ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் பொருளாதார ரீதியாக நம்பிக்கை அளிக்கும் காலமாக அமையலாம். பணியிடத்தில் உங்களின் திறமை வெளிப்படுவதுடன், செல்வாகும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய வருமானத்திற்கான வழிகள் உருவாகலாம். இதனால் இதுவரை இருந்த நிதி நெருக்கடிகள் படிப்படியாக குறையக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் தேடி வரலாம். நீண்ட காலமாக எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதற்கான சூழலும் உருவாகும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை தடையின்றி முடிக்க முடியும். அதேபோல், நீதிமன்றம் தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வருபவர்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan