Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க முடியுமா? என்பது குறித்த முக்கிய அப்டேட்
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க முடியுமா? அரசு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
1/5
புதிதாக விண்ணப்பிக்க முடியுமா?
மகளிர் உரிமைத்தொகை (Magalir Urimai Thogai) புதிதாக விண்ணப்பிக்க முடியுமா? : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் யாரும் விண்ணப்பிக்க முடியாது. குறிப்பாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவே முடியாது.
2/5
திட்டத்தின் நடைமுறை என்ன?
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் நடைமுறை என்ன? : மகளிர் உரிமைத்தொகை திட்டம் பொறுத்தவரை அரசு அறிவிக்கும்போது மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் தமிழ்நாடு அரசு, பயனாளிகளின் தரவுகளை மாதந்தோறும் சரிபார்க்கிறது. தரவுகளில் தவறு உள்ளவர்களை உடனடியாக நீக்குகிறது. அதில் ஆட்சேபனை இருந்தால் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யலாம்.
3/5
மனு கொடுக்கலாமா?
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு மனு கொடுக்கலாமா? : மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு நேரடியாக அரசு மனு வாங்குவதில்லை. இருப்பினும் பொதுமக்கள், குறிப்பாக மிக ஏழ்மையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களாக இருப்பின், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் வாரந்திர குறைத்தீர்ப்பு முகாம்களில் மனு கொடுக்கின்றனர்.
4/5
நீக்கப்படும் பயனாளிகள் பட்டியல்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நீக்கப்படும் பயனாளிகள் பட்டியல் : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதாந்திர தரவு ஆய்வுகளின்படி தகுதியில்லாதவர்கள், இறந்தவர்கள், விருப்பம் தெரிவித்து இத்திட்டத்தில் இருந்து விலக மனு அளித்தவர்களை நீக்குவதாக தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ளது.
5/5
எப்போது விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்?
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் எப்போது விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்? : மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாகம் பொறுத்தவரை, 2029 ஆம் ஆண்டு தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு அல்லது ஒரு ஆண்டுக்கு முன்பாக இத்திட்டம் விரிவாக்கம் தொடர்பான அப்டேட் வர வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால் முறையாக விண்ணப்பிக்கலாம். ஆனால், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.