• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /காத்திருக்கும் பெண்கள்! ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

காத்திருக்கும் பெண்கள்! ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 01, 2026, 04:31 PM IST|Updated: Nov 01, 2026, 04:35 PM IST
joinshare
Magalir Urimai Thogai Latest Update: மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கியமான அறிவித்துள்ளார். ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பணிகளை முதல்வர் விஜய் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

Magalir Urimai Thogai Latest Update: மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

Magalir Urimai Thogai1/5

மகளிர் உரிமைத் தொகை

திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை துவங்கி வைத்தார். இதன் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1.31 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
Magalir Urimai Thogai2/5

மகளிருக்கு ரூ.2500 உரிமைத் தொகை வழங்கப்படும்

2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, தவெக தலைவர் விஜய், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.2500 (ஆண்டுக்கு ரூ.30,000) உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதியாக அளித்தார். தேர்தல் தவெக வெற்றி, முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு தவெக வந்தவுடன் இத்திட்டத்தை பெயர் மாற்றி, திட்டத்தை மறுசீரமைக்க அவகாசம் தேவைப்படுவதால், ரூ.1,000 தடையின்றி வழங்கப்படும் என முதல்வர் விஜய் கூறினார்.
Magalir Urimai Thogai3/5

ரூ.2500 உரிமைத் தொகைக்கு காத்திருக்கும் பெண்கள்

தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆன நிலையில், இன்று வரை ரூ.1,000 தான் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. எப்போது ரூ.2500 தவெக அரசு வழங்கும் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், எதிர்பார்த்தும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், மகளிருக்கு ரூ.2500 வழங்குவது தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Magalir Urimai Thogai4/5

அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அறிவிப்பு

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, மகளிருக்கு ரூ.2500 உரிமைத் தொகை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பல்வேறு குளேறுபடிகள் இருக்கிறது. அவற்றை சரி செய்து, தகுதியுள்ள மக்களுக்கும் மட்டும் ரூ.2500 உரிமைத் தொகை சென்றடையும் வகையில், முதல்வரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு, முதல்வர் விஜய் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார்" என தெரிவித்துள்ளார்.
Magalir Urimai Thogai5/5

மகளிர் உரிமைத் தொகையில் குளறுபடிகள்

நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, பயனாளிகள் வங்கித் தரவுகளில் உள்ள ஐஎஃப்எஸ்சி குறியீட்டுத் தவறுகள், தொழில்நுட்பக் குளறுபடிகள் சரிசெய்யும் பணிகள் மாவட்ட வாரியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தகுதியற்ற பயனாளிகள் யாரெல்லாம் என்பதை ஆய்வு செய்து, அவர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
TN Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
TN Ration Strike: 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படுமா? 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்!

TN Ration Strike: 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படுமா? 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்!

2

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ரிசல்ட் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

3

EPFO: இனி கிளைம் செய்ய தேவையில்லை... PF பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வரும்! Explained

4

CM Health Insurance Scheme: ஏழைகளுக்கு இனி ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம்! Explained

5

கடன் வாங்கிவிட்டு பணிமாறுதலில் செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செக்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.