• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /TN Ration Strike: 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படுமா? 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்!

TN Ration Strike: 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படுமா? 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்!

12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நவம்பர் 2 முதல் 4 வரை ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Written ByR Balaji
Published: Nov 01, 2026, 06:36 PM IST|Updated: Nov 01, 2026, 06:42 PM IST
joinshare
TN Ration Strike: 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படுமா? 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
TN Ration Strike: 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படுமா? 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்!

TN Ration Strike: 3 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படுமா? 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்!

2

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ரிசல்ட் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

3

EPFO: இனி கிளைம் செய்ய தேவையில்லை... PF பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வரும்! Explained

4

CM Health Insurance Scheme: ஏழைகளுக்கு இனி ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம்! Explained

5

கடன் வாங்கிவிட்டு பணிமாறுதலில் செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செக்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் நவம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ள குடும்பங்களுக்கு இந்த போராட்டம் சிரம்த்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

3 நாட்கள் போராட்டம்

ரேஷன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.

நவம்பர் 2: அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்.

நவம்பர் 3: கோட்ட அளவில் போராட்டம்.

நவம்பர் 4: வட்ட அளவில் ஆர்ப்பாட்டம்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக கடைகளில் பணியாளர்கள் வருகை குறையலாம் அல்லது கடைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை ரேஷன் கடைகள் பாதிக்கப்பட வாய்ப்பு?

தமிழகத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 26,618 முழுநேரக் கடைகளும், 10,710 பகுதி நேரக் கடைகளும் அடங்கும்.

இந்தக் கடைகள் மூலம் கோடிக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. எனவே, ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் தாமதம் அல்லது தற்காலிகப் பாதிப்பு ஏற்படலாம்.

ரேஷன் கடை ஊழியர்களின் 12 அம்சக் கோரிக்கைகள் என்ன?

  • ஊழியர்களின் பணிநிலை, ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாகப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • பொது விநியோகத் திட்டத்திற்கெனத் தனித்துறை உருவாக்க வேண்டும்.
  • நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்குத் தனி நிதி ஒதுக்கீடு செய்து மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும்.
  • குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்க வேண்டும்.
  • அத்தியாவசியப் பொருட்களைத் தரமான பொட்டலங்களாக வழங்க வேண்டும்.
  • அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்களை நியமிக்க வேண்டும்.
  • கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும்.
  • கடைகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இதுதவிர, ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது, வெங்காய விற்பனைக்கான ரூ.2 ஊக்கத்தொகை மற்றும் பணியாளர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

தீபாவளிக்கு முன்பு போராட்டம்.. பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரேஷன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு குடும்ப அட்டைதாரர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. பண்டிகைக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்குப் பல குடும்பங்கள் ரேஷன் கடைகளை நம்பியுள்ளன.

குறிப்பாக, அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பொருட்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், மூன்று நாட்களும் அனைத்து ரேஷன் கடைகளும் முழுமையாக மூடப்படும் என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. கடைகளின் செயல்பாடு எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பது போராட்டத்தின் போது தெரியவரும்.

எனவே, நவம்பர் 2 முதல் 4 வரை ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க திட்டமிடும் பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள கடைகளின் செயல்பாட்டு நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu